Friday, July 31, 2009

யாழ் மாநகர சபைத் தேர்தல் கருத்துக் கணிப்பு

யாழ் மாநகர சபைத் தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்பாக இடது மேல் மூலையில் வாக்குச் பொறி இணைக்கப்பட்டுள்ளது, நீங்களும் உங்கள் வாக்குகளைத் தெரிவியுங்கள்.

1. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - வெற்றிலை
2. ஐக்கிய தேசியக் கட்சி - யானை
3. இலங்கைத் தமிழரசுக் கட்சி - வீடு
4. தமிழர் விடுதலைக் கூட்டணி - உதயசூரியன்
5. சுயேட்சைக் குழு .1 - கப்பல்
6. சுயேட்சைக் குழு .2 - பூட்டு

யாழ் மாநகர சபை ஈபிடிபி வசமாகும் கருத்துக் கணிப்பு !

2009.08.08 ஆம் திகதி நடைபெறவுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபை தேர்தல் தொடர்பாக "மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் மனிதவுரிமைகள் இல்லம்" என்பன இணைந்து யாழ் மாநகர சபைக்குட்பட்ட வாக்காளர் மத்தியில் நடாத்திய கருத்துக் கணிப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தலைமையாகக் கொண்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியே அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் என அறிவித்துள்ளது.

2009.07.22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை யாழ் மாநகர சபைக்குட்பட்ட 23 தேர்தல் வட்டாரங்களில் வசிக்கும் 880 வாக்காளர்களிடம் 36 வெளிக்கள ஆய்வாளர்கள் நடாத்திய கருத்துக் கணிப்பில் யாழ்ப்பாண மாநகர சபை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வசமாகுமென அறிய முடிகின்றது.

மேலதிக விபரங்களுக்கு அழுத்தவும்

வவுனியா நலன்புரி நிலையங்களில் வாழும் யாழ் மாவட்ட மக்களை டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்கின்றார் !

வன்னி யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தற்காலிகமாக வாழ்ந்து வரும் 11960 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 40000 பேருக்கும் அதிகமான யாழ்ப்பாண மாவட்ட மக்களை, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெறுப்பேற்கவுள்ளார்.

வவுனியா மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களை வந்து பொறுபேற்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைத்ததற்கிணங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இம் மக்களை அடுத்த வாரம் பொறுப்பேற்கவுள்ளார்.

நலன்புரி நிலையங்களில் தற்காலிகமாக வசித்து வரும் மக்களது நலன்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அமைச்சர் தேவானந்தா தொடர்ச்சியாகப் பேசி வருவதனையடுத்து அம் மக்களை சொந்த இருப்பிடங்களில் மீள் குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இதன் முதற்கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 1141 குடும்பங்கள் தங்களது சொந்த இடங்களுக்கு விரைவில் மீள் குடியேற்றம் செய்யப்படவுள்ளனர்.

Thursday, July 30, 2009

யாழ் குடாவில் பரவலாக விற்பனையாகும் போலிப் படிவம் !

வன்னி யுத்தத்தில் இருந்து மீண்டு, தற்காலிக நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் மக்களின் உறவினர்களை ஏமாற்றும் நோக்கில், "தடுப்பு முகாம்களிலுள்ள உறவினர்களை விடுவிப்பதற்கான விண்ணப்பம்" எனப் போலியாகத் தயாரிக்கப்பட்ட படிவம் சில விசமிகளால் நூறு ரூபாய் பணத்துக்கு யாழ் குடாவில் பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகச் செய்திகள் கூறுகின்றன.

இது தொடர்பாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் திரு. டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரித்த போது, இடம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வரும் மக்கள் தற்காலிகமாக நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனரேயன்றி, அம்மக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படவில்லை என்பதே உண்மையாகும், எனவே தடுப்பு முகாம்களில் அம்மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றி சட்டத்திற்கு முரணாக பொதுமக்களிடமிருந்து பணம் பறிக்கும் செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன, ஆகவே பொது மக்கள் இந்த போலி விண்ணப்பப் படிவத்தினை நம்பி ஏமாற வேண்டாமென குறிப்பிட்டார்.

Wednesday, July 22, 2009

யாழ்ப்பாணம் - கொழும்பு பேரூந்து சேவை ஆரம்பமாகியது !

விரைவில் A-9 பாதையால் பொது மக்களுக்கான கொழும்பு - யாழ்ப்பாணம் போக்குவரத்துச் சேவை ஆரம்பமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான திரு. டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொது மக்களுக்கு உறுதியளித்ததற்கிணங்க இன்று போக்குவரத்துச் சேவை ஆரம்பமாகியது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகில் வைத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷவும் இணைந்து தேசியக் கொடியை அசைத்து கொழும்பு செல்லும் பேரூந்து சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

ஐந்து பேரூந்துக்களில் 120 பொது மக்கள் தங்களது தென் பகுதி நோக்கிய பயணத்தை இன்று காலை 10:30 மணியளவில் ஆரம்பித்தனர், பயண ஆரம்ப விழாவுக்கு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் எஸ். எ. சந்திரசிறி, ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன உட்பட பல்வேறு பிரமுகர்களும் வருகை தந்து சிறப்பித்தனர்.







Monday, July 20, 2009

13 வது திருத்தச் சட்டம் முழுமையான தீர்வல்ல ஆரம்பம் மாத்திரமே! - டக்ளஸ் தேவானந்தா


(பெரிய எழுத்து தேவையெனில் கட்டுரை மேல் அழுத்தவும்)

Sunday, July 19, 2009

அதிகாரம் இல்லாமல் அரசியல் தீர்வு சாத்தியமில்லை - டக்ளஸ் தேவானந்தா


(பெரிய எழுத்து தேவையெனில் கட்டுரை மேல் அழுத்தவும்)

Thursday, July 16, 2009

வவுனியா நகரசபைத் தேர்தல் தொடர்பான ஈபிடிபியின் கலந்துரையாடல்

வவுனியா நகரசபைத் தேர்தல் சூடு பிடித்துள்ள இந் நேரத்தில் தேர்தற் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் ஈழமக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் அமைச்சர் திரு.டக்ளஸ் தேவானந்தா தலைமையில், நகர சபைத்தேர்தலில் போட்டியிடும் ஆறு வேட்பாளர்கள், வவுனியா மாவட்ட ஈபிடிபி சிரேஷ்ட உறுப்பினர்கள், சுவிற்சலாந்து பிரித்தானியா கனடா மற்றும் நோர்வே ஆகிய சர்வதேச நாடுகளுக்கான கட்சிப் பிரமுகர்கள் அடங்கலான கட்சிப் பிரதிநிதிகள் விசேட சந்திப்பு நேற்று 2009.07.15 மாலை வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

வுவுனியா செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மக்களின் பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் தீர்ப்பதற்கான திறவுகோலாக இத் தேர்தல் இருப்பதால் எமது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலமே மக்களினதும் கட்சியினதும் எதிர்கால நலன்களை உத்தரவாதம் செய்ய முடியும் என்பதால் எமது பணிகளை உறுதியுடன் முன்னெடுக்க வேண்டுவென ஈழமக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

தோழர் முகுந்தனின் உரையும் சிரார்த்ததினமும் !

1989.07.16 ஆம் நாள் கொழும்பு வெள்ளவத்தைக் கடற்கரையில் வைத்து கொலை செய்யப்பட்ட தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் உமாமகேஸ்வன் அவர்களின் 20 வது சிராத்த தினம் நினைவு கூரப்பட்டு வருகின்றது.

1980 ஆம் ஆண்டு காலத்தில் தோழர் முகுந்தன் என அழைக்கப்பட்ட திரு.உமாமகேஸ்வரன் ஆற்றிய உரையொன்றினை பதிவு செய்வதில் "ஜனநாயகன்" மகிழ்வு கொள்கின்றான்.

(படத்தை அழுத்தி உரையைக் கேட்கலாம்)
நன்றி: நெருப்பு

Friday, July 10, 2009

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தல் - 2009




ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள்.

சில தினங்களில் யாழ்ப்பாணம் - கொழும்பு சொகுசுப் பேரூந்து சேவை

ஏ-9 பாதையூடாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கத்தக்கதான போக்குவரத்துச் சேவை சில தினங்களில் ஆரம்பிக்குமென சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதற்காக ஐந்து சொகுசுப் பேரூந்துக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவை முதற்கட்டமாக யாழ்ப்பாணம் நோக்கி ஒன்று விட்டு ஒரு நாளைக்கு தமது பயண சேவையைத் தொடரும் எனவும் இதேபோன்று யாழ்ப்பாணத்தில் இருந்தும் கொழும்பு நோக்கி ஐந்து சொகுசுப் பேரூந்து சேவை இடம்பெறுமெனவும் இது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Saturday, July 4, 2009

யாழ்.மாநகரசபைத் தேர்தலிற்காக வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் ஈபிடிபி பெயர்ப் பட்டியல்.

யாழ்ப்பாணம் மாநகரசபைத் தேர்தலிற்காக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றனர், இத் தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களின் பெயர் விபரம்.