இறுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களின் பேரணி சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அலுவலகத்திற்கு வந்து கல்லூரி அதிபரின் ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்த மகஜர் ஒன்றை அமைச்சரிடம் கையளித்ததுடன் அதிபரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
Wednesday, September 30, 2009
யாழ். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் நடாத்திய ஆர்ப்பாட்டம்!
Follow @jananayakan
யாழ். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியின் பதில் அதிபர் திரு.யோகராஜன் அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்யுமாறு கோரி கல்லூரியின் மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
இறுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களின் பேரணி சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அலுவலகத்திற்கு வந்து கல்லூரி அதிபரின் ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்த மகஜர் ஒன்றை அமைச்சரிடம் கையளித்ததுடன் அதிபரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இறுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களின் பேரணி சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அலுவலகத்திற்கு வந்து கல்லூரி அதிபரின் ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்த மகஜர் ஒன்றை அமைச்சரிடம் கையளித்ததுடன் அதிபரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
Monday, September 28, 2009
யாழ். உடுவில் மகளிர் கல்லூரிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
Follow @jananayakan
யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியில் நேற்று பெற்றோர், ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்தார்.

Thursday, September 24, 2009
வலிகாமம் பகுதியில் கோப் சிட்டிகளை அமைச்சர் டக்ளஸ் திறந்து வைத்தார்!
Follow @jananayakan
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் பல நலத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன, இதனை அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வருகின்றார்.
இதன் ஓர் அங்கமாக "கோப் சிட்டி" பல இடங்களிலும் திறக்கப்பட்டு வருவது சகலரும் அறிந்ததே, இதன் ஓர் கட்டமாக வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட குப்பிளான் மற்றும் ஏழாலை பகுதிகளிற்கான கோப் சிட்டிகளை இன்று 24 ஆம் திகதி அமைச்சர் திறந்து வைத்தார்.

Wednesday, September 16, 2009
யாழ் குடாவுக்கு தமிழ்ப் பொலிஸார்!
Follow @jananayakan
யாழ் குடாநாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பணுவதற்காக ஸ்ரீலங்கா காலாட்படைக்கு தமிழர்களைச் சேர்த்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதன் முதற் கட்டமாக பொலிஸ் சேவைக்கு ஆண்/பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சாரதிகள் மற்றும் உதவிப் பொலிஸ் அதிகாரி (எஸ்.ஐ) போன்ற பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
யாழ் குடாவில் சட்டமும் ஒழுங்கும் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டுமெனில் தமிழ்ப் பொலிஸ் நிர்வாகம் தேவையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து இந் நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
யாழ் குடாவைச் சேர்ந்த மேற்படி பதவிக்குத் தகுதியானவர்கள் அவரவர் பிரிவுகளில் உள்ள பிரதேச செயலகம் மற்றும் உதவி அரசாங்க அதிபர் காரியாலயங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

Monday, September 14, 2009
ஜனநாயகப் பாதை!
Follow @jananayakan

துப்பாக்கி கலாசாரம்
வன்மம் கொண்டதால்
நிரந்தரமாய்
தூக்கம் கண்டதோ
தமிழினம்!
& & & &
ஓரணி
திரண்டால்
துரத்தலாம்
துப்பாக்கியைத்
தூரத்தே!
& & & &
இனியும்
வேண்டாம்
எம்மவரைச்
சீரழிக்கும்
துப்பாக்கி
நாகரீகம்!
& & & &
படுகொலைச்
சம்பிரதாயத்தை
இல்லாதாக்கி
படைப்போம்
புதிய சமுதாயம்!
& & & &
ஆதிக்கவெறி
அழிந்தது இனி
எமக்கும்
வழி காட்டுமே
ஜனநாயகப் பாதை!
&&&&&&&&&&& கலை, வன்னி.

துப்பாக்கி கலாசாரம்
வன்மம் கொண்டதால்
நிரந்தரமாய்
தூக்கம் கண்டதோ
தமிழினம்!
& & & &
ஓரணி
திரண்டால்
துரத்தலாம்
துப்பாக்கியைத்
தூரத்தே!
& & & &
இனியும்
வேண்டாம்
எம்மவரைச்
சீரழிக்கும்
துப்பாக்கி
நாகரீகம்!
& & & &
படுகொலைச்
சம்பிரதாயத்தை
இல்லாதாக்கி
படைப்போம்
புதிய சமுதாயம்!
& & & &
ஆதிக்கவெறி
அழிந்தது இனி
எமக்கும்
வழி காட்டுமே
ஜனநாயகப் பாதை!
&&&&&&&&&&& கலை, வன்னி.
Friday, September 11, 2009
ரிஆர் ரி தமிழலையில் டக்ளஸ் தேவானந்தா!
Follow @jananayakan
எதிர்வரும் சனிக்கிழமை ரிஆர்ரி தமிழலை வானொலியின் இரவு நிகழ்ச்சியான உறவுப் பாலம் நிகழ்வில் ஈபிடிபி செயலாளர் நாயகமும் சமுக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார், இவ்வேளை வானொலி நேயர்களும் அமைச்சருடன் உரையாடலாமென அறிய முடிகின்றது.
ஐரோப்பிய நேரம் இரவு 10 மணி முதல் 12 மணி வரை இவ் உறவுப் பாலம் நிகழ்ச்சியைக் கேட்கலாம்.
அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம்
00 33 1 48 35 32 00,
00 33 1 48 35 32 00
http://www.trttamilalai.com
ஐரோப்பிய நேரம் இரவு 10 மணி முதல் 12 மணி வரை இவ் உறவுப் பாலம் நிகழ்ச்சியைக் கேட்கலாம்.
அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம்
00 33 1 48 35 32 00,
00 33 1 48 35 32 00
http://www.trttamilalai.com
Tuesday, September 8, 2009
கொழும்பு செல்லும் 1200 யாழ், மாணவ விளையாட்டு வீரர்கள்!
Follow @jananayakan
வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டி கடந்த மாதம் மன்னாரில் இடம் பெற்றது, இப் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற 1200 பேரளவிலான மாணவ வீர, வீராங்கனைகள், கொழும்பில் நிகழும் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
இவ்விளையாட்டு வீரர்களைக் கொழும்புக்கு அனுப்பி வைப்பதற்கான முழு ஏற்பாடுகளையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்துள்ளார், முதற் தொகுதியாக 321 விளையாட்டு வீரர்கள் மற்றும் 62 பொறுப்பாசிரியர்கள் அடங்கலான குழுவினர் ஏ-9 பாதையூடாக கடந்த 2009.09.04 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பைச் சென்றடைந்துள்ளனர்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் தொகுதி விளையாட்டு வீரர்களும், பொறுப்பாசிரியர்களும் எதிர்வரும் 10 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்புக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Subscribe to:
Posts (Atom)