இம்மக்களுக்கான பதிவுகள் பிரதேச செயலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் எதிர்வரும் புதன்கிழமை அவர்களது பிரதேச செயலகங்களில் 5000 ரூபா வீதம் முற்பணம் வழங்கப்படுவதுடன் மேலும் 20000 ரூபா அவர்களது வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும்.
அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா, ஈபிடிபி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.அசோக் சந்திரகுமார், வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் உட்பட பல அரச திணைக்கள அதிகாரிகளும் இம் மக்களைச் சென்று பார்வையிட்டனர்.