இக் குழுவினர் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்று யாழ்ப்பாண யாழ் பொது நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்து கொண்டனர், யாழ் மாவட்டத்தின் அரச திணைக்கள அதிகாரிகள், யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், சமயத்தலைவர்கள், கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள், வர்த்தகர்சங்கப் பிரதிநிதிகள், மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.
இந்தச் சந்திப்பையடுத்து நிவாரணக் கிராமங்களில் இருந்து அண்மையில் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடரும் மாணாக்கர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.