இந் நிகழ்வில் யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, உள்ளூராட்சி சபை உதவி ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார் மற்றும் எழுத்தாளர்களான செங்கையாழியான் கலாநிதி க.குணராசா, திரு.சிறிபதி, திரு.சாந்தன், திரு.சட்டநாதன், திரு.சோ.பத்மநாதன் ஆகியோரும் உரையாற்றினர்.
இம் அமர்வில் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டது. இதன் தலைவராக செங்கை ஆழியான், உப தலைவர்களாக சாந்தன் மற்றும் தெணியான் செயலாளராக சிறிபதி, உப செயலாளராக யோகேஸ்வரி சிவப்பிரகாசம் பொருளாளராக சோ. பத்மநாதன் மற்றும் நிர்வாக் குழு உறுப்பினர்களாக த.தணிகாசலம் தாட்சாயிணி த.கலாமணி இயல்வாணன் நயினை கிருபானந்தன் ஆனந்தன் பொன்.சுகந்தன் சங்கர் கே.வி.குணசேகரம் ஆகியோர் தெரிவாகினர்.