
யாழ்.மாவட்ட மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியான அமைச்சர் ஒருவர் கொழும்பிலிருந்து தரைப் பாதை வழியாக யாழ்ப்பாணம் சென்றடைந்த முதலாவது வரலாற்றுப் பதிவு இதுவாகும்.
கொழும்பிலிருந்து தரைப் பாதையூடாக பயணத்தை ஆரம்பித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வவுனியா பணிமனையில் அமைச்சு அதிகாரிகள் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின் இன்று காலை வவுனியாவிலிருந்து புறப்பட்டு இன்று நண்பகல் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தார்.