www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Friday, May 29, 2009

பிரபாகரனின் மரணத்தை மீண்டும் உறுதிப்படுத்திய செல்வராஜா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் இறப்பை கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தென்புலோலியூர் கிருஸ்ணலிங்கம் அண்மையில் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சேவைக்காக செவ்வி கண்டு ஒலிபரப்பு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வியைக் கேட்பதற்கு படத்தின் மேல் சொடுக்கவும்.

நன்றி: www.ctbc.com

Wednesday, May 27, 2009

பணத்தை அழிவை விடுத்து ஆக்கத்திற்கு பயன்படுத்துங்கள் - த நேஷன் வாரமலருக்கு டக்ளஸ் தேவானந்தா செவ்வி.

புலம்பெயர்ந்துள்ள தமிழ் நெஞ்சங்களே பணத்தை ஆக்கத்திற்கு பயன்படுத்துங்கள் அழிவுக்கல்ல - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

த நேஷன் வாரமலருக்கு வழங்கிய செவ்வியின் தமிழாக்கம்

புலிகளின் வீழ்ச்சி ஏனைய மிதவாத தமிழ் அரசியற் கட்சிகளுக்கு நிர்ப்பந்தத்திலிருந்து வெளியேறி சுதந்திரமாகச் சுவாசிக்கவும் பேசவும் நாட்டில் வழிகோலியிருக்கின்றது எனக்கொள்ளலாம்.

புலிகளின் நிகழ்ச்சி நிரலில் ஒன்று மிதவாத அரசியற் கட்சிகளை அழித்தொழிப்பதும் தமிழர் தம் கோரிக்கைகளை ஆதரிப்போihச் சுட்டுத்தள்ளுவதுமேயாகும்.

இலங்கையில் ஏகப்பிரதிநிதிகளாக தம்மை இனங்காட்ட ஏதுவாக அஞ்ஞாதவாசத்தனம் உதவி நின்றது.

ஏனைய பல தமிழ் கட்சிகள் தமிழர் தம் பிரச்சனைகளை மேலெடுக்க முயன்றபோது அவர்களது குரல்வளை நசுக்கப்பட்டு முயற்சிகள் மறைக்கப்பட்டன. தொடர்ந்தாற் போலுள்ள அரசும் துப்பாக்கிகளின் ஒலியை ஏற்றுக்கொண்டு ஏனைய கட்சிகளை ஓரங்கட்டியது. புலிகள் எல்லா அரசியல் சமரச பேச்சுவார்த்தைகளின் போதும் பயங்கரவாத பாணியில் முதன்மைப் படுத்தப்பட எஞ்சிய ஜனநாயக மிதவாதக் கடசிகளை ஓரங்கட்டி பின் தள்ளியது.

புலிகளை எதிர்க்க முனைந்த சில மிதவாதத் தமிழ் அரசியலாளர்கள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். படுகொலைகளிலிருந்து தப்பியோர் நாளும் பொழுதும் கொலைப்பயங்கரத்தைப் புறந்தள்ள முயற்சிகள் எடுத்தனர்.

புலிப்பயங்கரவாதிகளின் பிடிக்குள் பலதடவை சிக்கிய முதன்மை வாய்ந்த அரசியல்வாதி ஒருவர் புத்திசாதுரியமாக அவர்களிடமிருந்து தப்பித்துக் கொண்டுள்ளார். அவர் வேறு யாருமல்ல ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களே.

இன்று தேவானந்தா அவர்கள் தனது ஒரு கண்ணில் நிலையான காயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். புலிப் பயங்கரவாதிகள் சிறைவைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைக்கு சென்றபோது கண்களை பிடுங்கி எடுக்க பயங்கரவாதிகள் முனைந்தனர்.

ஏனைய கட்சிகள் போலல்லாது ஜனநாயக வழிமுறையில் கால்பதித்த கட்சி ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி ஆகும். தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் புலிகளே என்ற மாயை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஜனநாயக வழியில் பிரவேசத்தோடு மறையத் தொடங்கியது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நிகழ்கால தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்னாள் ஈழமக்கள் புரட்சிகார முண்ணணியின் இராணுவத் தளபதியாவார். அவர் சீரிய நிலை தவறா சிந்தனையாளனுமாவார்.

த நேஷன் பத்திரிகையாளருடனான நேர்காணலில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நாடித்துடிப்பை விரைந்து உணர முடிந்ததென்றும் அதிலிருந்து ஒரு முடிவுக்கு வந்ததாகவும் கூறினார். அவைகளில் ஒன்று புலிகளின் பிரச்சனை என்பது வேறு மற்றையது தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனை வேறு என்பதாகும்.

வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு இரு வேறு பிரச்சனைகள் உண்டென்பதை ஆணித்தரமாக தளம்பாது கைக்கொண்ட அரசியல்வாதி அவர் ஒருவராவார். புலிகளின் பிரச்சனையை அரசு இராணுவரீதியில் எதிர்நோக்க வேண்டும் என்றும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகள் அரசியல் வழியில் தீர்க்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இத்தகைய பின்னணியில் புலிகளின் மீதான இராணுவ வெற்றி பற்றிய திருப்தியை வெளியிட்டதோடு பல்துறை அணுகுமுறைகளால் அரசு தமிழர் தம் பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வுகாண வேண்டுமென்றும் கூறினார். வரலாற்றில் புலிகள் செய்த பெரும் தவறு இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியைக் கொலை செய்ததென்றும் கருத்துரைத்தார். இதுவே புலிகளின் வீழ்ச்சிக்கு அடிகோலியது என்றும் கூறினார்.

புலிகளின் வீழ்ச்சிக்கும் பேரழிவுக்கும் காரணங்களாக புலித்தலைவர் பிரபாகரனின் எண்ணங்களுக்கும் கொள்கைகளுக்கும் முரணாக நடந்து கொள்வோரைக் கொன்றொழித்தமை எனவும் பிரஸ்தாபித்தார்.


போதும் போதுமென்றாகிவிட்டது

பிரபாகரன் கொலைசெய்யப்பட்டுவிட்டார். யுத்தம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. சிறிலங்கா அரசு தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும்.

அமைச்சர் 13ம் யாப்புத் திருத்தத்திற்கு அமைவான தீர்வினை முதலில் முழுமையாக நடைமுறைப் படுத்தப்படவேண்டும். அநேக பிரச்சனைகளுக்கு சிறுபான்மையினர்க்கு அது தீர்வாக அமையும் என்பதைக் கருத்தினை முன்வைத்துள்ளார்.

வெற்றிபெற்றமைக்கான பெருந்தன்மையானது சகல புலிகளின் ஆதரவாளர்களுக்கும் மன்னிப்பளிப்பதேயாகும். போரிலிருந்து உறங்கு நிலைக்கு வந்த புலிகளுக்கும் மன்னிப்பளிப்பது பெருந்தன்மையானதே. அரசில் சரணடைந்த புலிகளைத் தண்டிக்கக்கூடாது. மாறாக அவர்களின் உள்ளத்தை வெல்ல எல்லா முயற்சிகளும் கைக்கொள்ள வேண்டும். அதுவே நாட்டிற்கு மீள அணிதிரண்டு தீங்கிழைக்காமல் இருக்க வித்திடும்.

ஜனதா விமுக்தி பெரமுனைப் போராளிகள் சரணடைந்த போது மன்னிப்பளிக்க முடியுமென்றால் இவர்களுக்கும் அதே வழியில் ஏன் மன்னிப்பளிக்கக்கூடாது.


தமிழர்தம் பிரச்சனைக்கு துரித தீர்வு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மே மாதம் 22ம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்திற்கு எதிரே நடந்த பிரமாண்டமான மக்கள் கூட்டத்திற்கு உரையாற்றும்போது யுத்தம் நாட்டு அபிவிருத்திக்கு ஒரு தடைக்கல்லாக இருக்கக்கூடாது. அதனை எவரும் ஒரு சாட்டாக எண்ணவும் கூடாது என்றார். தேவானந்தா அவர்களும் அதே கருத்துடைய மனவெழுச்சியை எதிரொலித்துள்ளார்

தொடர்ந்து கருத்து வெளியிட்ட தேவானந்தா அவர்கள் யுத்தத்தைச் சாட்டாகக்கொண்டு கடந்த காலங்களில் வேண்டுமென்றே வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்ய மறுத்துள்ளனர். இப்போது யுத்தம் முடிவுற்றது. இப்போதைய அரசு அப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்யக் காலம் தாழ்த்தக்கூடாது.

இயலுமானவரை தமிழ் பேசும் மக்களுக்கு நாளுக்கு நாள் எழும் பிரச்சனைகளை அரசு எதிர்கொண்டு தீர்க்க முன்வரவேண்டும். அவ்வாறு செயற்படும்போதே அரசியல் தீர்வுக்கான பொதியையும் முன்வைக்க வேண்டும். அது பிரதேச சுயாட்சிக்கு வித்திடுவதாகவும் அமைய வேண்டும்.

அரசு இச்செயற்பாட்டில் மந்தகதியில் செல்லக்கூடாது. இவை விரைவாகச் செயற்படுத்தப்படவும் வேண்டும். அவர் மேலும் கருத்துரைக்கையில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருப்போரை அடுத்த ஆறுமாதங்களில் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.


மேற்குலகில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்க்கு விடுக்கும் செய்தி

புலிகளுக்கு கோடிக்கணக்கில் பணத்தை வாரி வழங்கிய புலம் பெயர் தமிழர்களுக்கு தேவானந்தா அவர்கள் விடுத்த செய்தியில் வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களின் அழிவுக்கே பணத்தை இதுவரை இறைத்துள்ளீர்கள். இப்போது அச்செயற்பாட்டை அவர்களது மீள் கட்டமைப்புக்கும் அபிவிருத்திக்கும் திருப்பி வாரி வழங்குங்கள். இச்செயற்பாட்டை தன்னுடைய இலத்திரனியல் செய்தி ஊடகங்களுடாக ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் நேரடியாகவோ மறைமுகமாகவோ புலம்பெயர் மக்களுடன் தொடர்புகொண்டுள்ளதாவும் பணத்தை பயங்கரவாத செயற்பாட்டிற்கு வழங்குவது பாவமென்பதை உணர்த்தும் செயற்பாட்டில் படிப்படியாக முயன்று கொண்டிருப்பதாகவும் கூறினார். அரசு தமிழர் தம் உள்ளத்தை வெற்றிகொள்ளத்தக்க நிகழ்ச்சி நிரல்களை கைக்கொண்டால் அவர்கள் ஜனநாயக வழி முறைகளையே பின்பற்றுவர் என்றும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

நன்றி ஈபிடிபி நியூஸ்.கோம்

“Use money to construct not destroy”
- Douglas Devananda tells Tamil Diaspora


The defeat of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) has given a breathing space for other Tamil moderate political parties in the country to come out of their shell and speak out. One of the LTTE’s agendas was to eliminate and annihilate its rivals, and scores of moderate Tamil leaders and others who espoused the Tamil issues were gunned down.

This way, the LTTE managed to portray itself as the supreme party to represent the interests of the Tamils in Sri Lanka. Though several other Tamil political parties made attempts to air the grievances of the Tamils, their voices were submerged. The successive governments too, were ready to listen to the sound of the guns, thereby deviously pushing aside other parties.

The LTTE’s presence in almost all the political negotiations, and the movement’s terror tactics in order to achieve mileage, pushed the other democratic and moderate parties to the back seat in the past. A few of those Tamil moderates who attempted to oppose the LTTE were also brutally assassinated. Those who managed to escape assassination were haunted day and night in attempts to murder them.

One of the key politicians who was caught in the hands of the LTTE several times, but yet managed to skillfully break away from them, is none other than Eelam Peoples Democratic Party (EPDP) Leader Douglas Devananda.
Today, Devananda lives with a permanent injury to one of his eyes, because the LTTE tried to pluck out his eyes during a visit he made to a prison where the LTTE suspects were kept.

EPDP’s entry to the mainstream


The EPDP, like any other Tamil party, entered into the mainstream of democracy, once it realised that the LTTE who claimed to be the sole representatives of the Tamils, had lost its vision half way through. The EPDP was formed by the present leader and Minister Douglas Devananda. Devananda was the former military wing leader of the Eelam Peoples Revolutionary Liberation Front (EPRLF,) and is a fine marksman.

In an interview with The Nation he said that he was quickly able to feel the pulse of the LTTE leader Prabhakaran and then came to the conclusion that there were two different issues: one the problem of the LTTE, and the other the problems faced by the Tamils.

He is one of the few politicians who has consistently maintained that there are two different issues with regard to the Tamils in the north and east. He has maintained that the problems faced by the LTTE should be dealt with militarily by the government, and the problems faced by the Tamil speaking people should be dealt with politically.

Given this background, today Devananda is quite content with the military defeat of the LTTE and says he is happy that the LTTE has been defeated. However, he said the government has to find solutions to the Tamil issues soon by evolving various mechanisms.

To him the biggest blunder the LTTE has made in its history, was the killing of the Indian Prime Minister. Devananda’s view is that the LTTE led by Prabhakaran, had already lost its vision by the time it decided to kill Rajiv Gandhi. To him this was the beginning of the downfall of the LTTE. He also said the LTTE hunting down anyone who contradicted Prabhakaran’s policies and decisions, was the other factor that contributed towards its collapse.

Enough is enough


Convinced that the war is now over, and Prabhakaran has been killed by the Sri Lankan forces, he said the government must expedite its political process to find a solution to the problems faced by the Tamils.
He has, of course, offered a solution based on the existing 13th Amendment to the Constitution and believes that the full implementation of the 13th Amendment could be the solution to most of the problems faced by the minority. The Minister said that the government that is victorious should be magnanimous, and should be willing and be able to give a pardon to all the LTTE supporters and even the sleeping cadres.

In fact, he said that he is now preparing to call for the immediate surrender of all the sleeping cadres. Devananda said that that the LTTE cadres who surrendered to the government should not be punished. Instead, he said they must be given a pardon and the government must make every attempt to win over their hearts and minds, so that they will not be motivated to re-group and cause harm to the country. He further asked if the JVP cadres who surrendered were given a pardon, why could not the LTTE cadres be given the same treatment?

Fast track solving problems of Tamils

President Mahinda Rajapaksa, on Friday May 22, addressing a mass gathering opposite Parliament said that nobody could now make the war an excuse not to develop the country. Devananda too has echoed similar sentiments. He said in the name of war, some governments in the past, deliberately refused to develop the North and East. He added that with the war now over, the present government cannot any longer delay developing these areas.

He said the government must be ready to meet the day to day problems of the Tamils as fast as possible, and in the process of doing this must try to evolve a political package that would have features good enough for regional autonomy. “The government cannot go slow on this process. These things must be done quickly,” he said. He further said in another six months time the IDPs should also be resettled in their own habitat.

Message to Tamil Diaspora


In his message to the Tamil Diaspora, who have thrown millions of rupees to help sustain the LTTE, Devananda said the Diaspora which had been making monetary contributions for the destruction of the Tamil community, should now contribute the same money for construction and re-building.
He said he has already started to address this issue through his websites, and added he is also directly and indirectly in touch with the Diaspora. “I am gradually educating these people and making them to understand that it is a sin to give money for militant purposes,” he said. He also said that equally the government too should have programmes that would win over the hearts and minds of the Tamils in general, so that they would only look at the democratic path.

Sunday, May 24, 2009

வே.பிரபாகரன் மரணமானார் - விடுதலைப் புலிகள் அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வன்னியில் ஸ்ரீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமான யுத்தத்தில் கடந்த 2009.05.17 ம் திகதி மரணித்ததாக விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் செல்வராஜா பத்மநாதன் சர்வதேச ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இனிமேல் விடுதலைப் புலிகள் அமைப்பு ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்து செயற்படவிருப்பதாகவும் அவர் அச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வே.பிரபாகரனும் மற்றும் தளபதிகளும் உயிருடன் இருப்பதாக அண்மைக் காலமாகப் பலதரப்பட்ட செய்திகளும் வெளியாகி இருப்பதனால் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் இச் செய்தியை தெரிவிப்பதாகவும், இனிமேல் விடுதலைப் புலிகள் சார்பான செய்திகள் தனது கையொப்பமின்றி அல்லது எனது வாய்மொழி உரையின்றி வருவனவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டாமென செல்வராஜா பத்மநாதன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்கள்:
பிபிசி தமிழோசை
அல்ஜசீரா

Thursday, May 21, 2009

உயிருடன் உள்ளார் பிரபா ?


தமி்ழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வன்னி யுத்தத்தில் ஸ்ரீலங்கா படையினரால் கொல்லப்பட்டதாக செய்திகளும், வீடியோ படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந் நேரத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் தனது குடும்பத்தினருடனும் மற்றும் தளபதிகள் சிலருடனும் எவ்வித ஆபத்துமின்றி உயிருடன் இருப்பதாக விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுத் தொடர்பாளர் கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் அல்லது செல்வராஜா பத்மநாதன் ஊடகங்களுக்குச் செய்தி வெளியிட்டு இருந்தார்.

செல்வராஜா பத்மநாதனின் செய்தியை உறுதிப் படுத்தக் கூடியவாறு இந்திய தமிழ் சஞ்சிகையான "நக்கீரன்" தனது இவ்வார பதிப்பில் "உயிருடன் உள்ளார் பிரபாகரன்" எனும் தலைப்பில் கட்டுரை பதிவாகி உள்ளது, அத்துடன் வே.பிரபாகரன் விடுதலைப் புலிகளுக்கே உரித்தான இராணுவ சீருடையில் மிடுக்காக அமர்ந்திருந்து பிரபாகரன் கொல்லப்பட்டதாக தொலைக்காட்சியிலும் மற்றும் பத்திரிகையிலும் வெளியான செய்தியை புன்முறுவலுடன் பார்வையிடும் காட்சியைப் போன்று கணினியில் உதவி கொண்டு தத்துரூபமாக கிராபிக்ஸ் முறையில் வடிவமைத்துள்ளார் நக்கீரன்.


இந்தப் படத்தினை மூலாதாரமாகக் கொண்டே நக்கீரன் புதிய படத்தினை தயாரித்துள்ளார், ஆனால் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என கலங்கி நிற்கும் பிரபாகரன் விசுவாசிகளை மேலும் அவஸ்தைப்படுத்துவதாகவே இப் படம் அமைந்துள்ளது என்பதை இவ்விடத்தில் குறிப்பிடுதல் அவசியம்.

2003.03.02 ஆம் திகதி தமிழ்நெட் இணையத் தளத்தில் வெளியான அன்ரன் பாலசிங்கத்துடன் பிரபாகரன் உரையாடும் படத்தினை மாற்றி வடிவமைத்த நக்கீரனின் படத்தினை உண்மையென நம்பிய புலம்பெயர் ஊடகமான தீபம் தனது செய்தியறிக்கையில் இப்படத்துக்கு முன்னுரிமை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tuesday, May 19, 2009

விடுதலைப்புலிகளின் தலைவரின் உடலம் அடையாளம் காணப்பட்டது !



ஸ்ரீலங்கா இராணுவதரப்பினரால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலம் அடையாளம் காணப்பட்டு, மருத்துவ ரீதியாகவும் உறுதிப் படுத்தப்பட்டதாக இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உறுதிப்படுத்தியுள்ளார்.

டிஎன்ஏ மரபணு சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதுடன், வே.பிரபாகரன் அறிமுகப்படுத்திய தமிழீழ அடையாள அட்டையும் B- குருதி மாதிரி பொறிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முதலாவது இலக்கத்தகடும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது ஸ்ரீலங்கா ரூபவாஹினியில் வே.பிரபாகரனின் சடலம் காண்பிக்கப்பட்டு வருகின்றது.

Monday, May 18, 2009

ஒருவரின் மரணத்தில் யாரும் மகிழ்ச்சி கொண்டாட முடியாது!

என்னைப் பொறுத்தவரையில் பிரபாகரன் இன்று கொல்லப்பட்டது என்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. பிரபாகரன் என்றோ தற்கொலை செய்து கொண்டவர் என்றே நான் கருதுகின்றேன். எமது மக்களின் உரிமைகளுக்காகப் போராடப் புறப்பட்ட சகோதர இயக்கத் தலைவர்களையும், பல்லாயிரக்கணக்கான சக இயக்கப் போராளிகளையும் தெருத்தெருவாகப் புலித்தலைமை கொன்றொழித்த போதே பிரபாகரன் தற்கொலை செய்துவிட்டதாகவே நான் கருதுகின்றேன். ஆயுதப்போராட்ட வழியில் மட்டுமன்றி அகிம்சை வழியில் உரிமை கேட்டு போராடியிருந்த தமிழ்த் தலைவர்களையும் சேர்த்தே புலித்தலைமை கொன்றொழித்தது. அப்போதே பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டுவிட்டதாகவே நான் கருதுகின்றேன். பல நூறு புத்திஜீவிகளையும் தலை சிறந்த கல்விமான்களையும் புலித்தலைமை கொன்றொழித்திருந்தது. அப்போதே பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டுவிட்டதாகவே நான் கருதுகின்றேன்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னர் எமது மக்களின் உரிமைகளுக்காக நீதியான ஒரு உரிமைப் போராட்டம் நடந்திருந்தது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அந்தப் போராட்டத்தில் நானும் பிரதான பாத்திரம் ஏற்றுச் செயற்பட்டிருக்கின்றேன். அந்தப் போராட்டத்தில் புலிகளுக்கு இருந்த பங்களிப்பை நான் மறுக்கவில்லை. அதை நான் கொச்சைப்படுத்தவும் இல்லை. ஆனாலும் அப்போது கூட புலித்தலைமை அரச படையினருக்கு எதிராகத் தங்களது துப்பாக்கிகளை திருப்பியதை விடவும் சகோதர இயக்கங்கள் மீதே தமது துப்பாக்கிகளைத் திருப்பியிருந்தார்கள். இது தற்கொலைக்கு ஒப்பானது என்ற விடயத்தை புலித்தலைமை புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அது குறித்து அப்போது சிந்தித்திருக்கவில்லை. எமது உரிமைப் போராட்டத்தின் ஆரம்பங்களில் பிரபாகரனுக்கு இருந்த பங்களிப்பை நான் ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக எமது போராட்டத்தைச் சொந்த இனத்தின் குருதி குடிக்கும் அழிவு யுத்தமாக மாற்றியது குறித்த முரண்பாடுகளே எனக்கு அதிகம் உண்டு.

பிரபாகரனை நம்பி தமது உயிர்களை அர்ப்பணம் செய்த எமது தமிழ் இளைஞர் யுவதிகளின் தியாகங்கள் அனைத்தும் வீணாகிப்போய் விட்டது என்பதே எமது கவலை. தவறுகளுக்கு அப்பால் புலிகள் உட்பட அனைத்து விடுதலை இயக்கங்களினதும் தியாகங்களினால்தான் இலங்கை - இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஆனாலும் அதைப் புலித்தலைமை பயன்படுத்தியிருக்கவில்லை. அன்று அதை ஏற்று செயற்பட்டிருந்தால் தவறுகளுக்கு அப்பாலும் பிரபாகரனுக்கு இன்று இந்த நிலை உருவாகியிருக்காது. உன் கால்களில் குத்திய முட்கள் ஒவ்வொன்றும் அடுத்தவன் தூவி விட்டவைகள் அல்ல. உனக்கு நீயே என்றோ தூவி விட்டவைகள். இதைத்தான் என்னால் கூற முடியும்.

தமக்குரிய படுகுழியைத் தாமே தோண்டி விட்டு அதனுள் வீழ்வதற்கு அவர்களே காத்திருந்து வீழ்ந்தமைக்கு அடுத்தவர்கள் எவரும் காரணமல்ல. பிரபாகரனின் முடிவிற்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் பயணத்திற்கான தடைகள் அகன்றிருப்பதாகவே நாம் கருதுகின்றோம். அதேவேளை தமிழ் மக்களின் அரசியல் தளத்தில் ஒரு இடைவெளி ஏற்பட்டிருப்பதாகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மாயையை ஏற்றுக்கொள்ள எமது கட்சி தயாராக இல்லை. ஏனென்றால் புலிகள் படுகொலையைப் புரிந்து பயங்கரவாதத்தை நடாத்தியபோது எமது தோழர்களும், மக்களும் படுகொலை செய்யப்பட்டபோதும் பல இழப்புக்களைச் சுமந்து கொண்டு ஜனநாயக வழிமுறையில் நடைமுறைச் சாத்தியமான வழியிலேயே போராடி வந்துள்ளோம். 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுற்படுத்துவதன் ஊடாக தமிழ்பேசும் மக்களின் கௌரவமான அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென நான் நம்புகின்றேன்.

இதை வலியுறுத்தி நாம் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றோம். எமது இந்த முயற்சிக்கு 13 ஆவது திருத்தச் சட்டம் உருவாகக் காரணமாக இருந்த நாடு என்ற வகையிலும் எம் மக்கள் மீதான அன்பும், அக்கறையும், உரிமையும் கொண்ட நாடுமாகிய இந்தியாவின் பங்களிப்பு மிக அவசியம் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். யார்தான் மரணித்தாலும், மக்களையும் மண்ணையும் கைவிட்டு ஓடினாலும், தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலுரிமை சுதந்திரம் நோக்கிய பயணம் தொடரும். அது பிபாகரனின் அழிவுப்பாதையில் அல்ல. ஆக்கபூர்வமான எமது நடைமுறைச்சாத்தியமான வழி முறையில் மட்டுமே தொடரும்.

தோழர் டக்ளஸ் தேவானந்தா பா.உ.
செயலாளர் நாயகம்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
அமைச்சர்
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை.

Friday, May 15, 2009

வன்னி நிலவரம்

Saturday, May 9, 2009

வட்டுக்கோட்டைப் பிரகடனம்

எம் இனிய நோர்வே வாழ் உறவுகளே

எம் தாயக தேசத்தின் அவலங்களை உங்களுக்கு சொல்லத்தேவையில்லை.
உறவுகளைப் பலி கொடுத்து உடமைகளை பறி கொடுத்து சொந்த வீடிழந்து சொந்தங்களை பிரிந்து அச்சத்தில் உறைந்து போன உயிர்களோடு மட்டும் ஓடி வந்த எமது உறவுகள் நடுத்தெருவிலும் இன்று நலன்புரி முகாம்களில் தங்களது வாழ்க்கையை தொலைத்து விட்டு இருக்கிறார்கள். 1976 இல் தந்தை செல்வா தலைமையில் எடுக்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானமும் தமிழ் பேசும் மக்களுக்கான விடுதலை என்பது சுதந்திர ஈழமே என்று அன்றைய சூழலில் இன்னொரு புறத்தில் கிளம்பிய எழுச்சியும் ஆயுதப்போராட்டத்தை தொடக்கி வைத்தன.

பல்வேறு விடுதலை அமைப்புகளும் பன்முகச்சிந்தனைகளோடு எழுந்து நின்று ஒன்று பட்டு போராட்டக்களத்தில் குருதி சிந்தி தியாகங்களை புரிந்தன. ஆனாலும் தாம் மட்டும் தனித்து நின்று போராட வேண்டும் என்ற தனித்தலைமை வெறிபிடித்த புலித்தலைமை சக விடுதலை அமைப்புகளை தடை செய்து சகோதரப்போராளிகளை தெருத்தெருவாக கொன்றொழித்தது. எதிரி யார் நண்பர் யார் என்று தெரிந்திராத புலித்தலைமையின் ஏக பிரதிநித்துவம் என்ற தனித்தலைமை வெறியினால் எமது போராட்டம் திசை மாறி சென்று சொந்த இனத்தின் குருதி குடித்து தமிழ் பேசும் மக்களின் போராடும் பலத்தை அடித்து நொருக்கி சிதைத்திருந்தது. இதனால் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நாம் அடைந்து விட முடியாது என்ற நம்பிக்கையீனங்களே தோன்றியிருந்தன. இந்த காலச்சூழலில்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பொன்னான வாய்ப்பு பிறந்திருந்தது. அதை ஏற்றுக்கொள்ள மறுத்த புலித்தலமைமை அன்றிலிருந்து அதன் பின்னர் கிடைத்த அரசியலுரிமை தீர்விற்கான அனைத்து சந்தர்ப்பங்களையும் தமது சுயலாப நோக்கங்களுக்காக சரிவரப்பயன்படுத்தியிருக்கவில்லை. இதனாலேயே எமது மக்கள் இன்று பேரழிவுகளையும், பெருந்துயரங்களையும் சந்தித்து வருகின்றார்கள்.

சகோதர விடுதலை அமைப்புகள் மீதான படுகொலைகளினால் வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது தமிழ் பேசும் மக்களை கைவிட்டுப்போனது. அதன் பின்னர் கிடைத்திருந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை புலித்தலைமை ஏற்று யுத்தத்தை தொடராதிருந்திந்தால் இன்று எமது மக்கள் நடைமுறையில்
சுய நிர்ணய உரிமைகளை அனுபவித்திருப்பார்கள். எமது மக்களை இன்று நடுத்தெருவிற்கு கொண்டு வந்திருக்க வேண்டிய துயரங்களும் நிகழ்ந்திருக்காது.

ஆளும் கட்சி அரசியல் தீர்வை முன் வைப்பதும் அதை எதிர்க்கட்சி எதிர்ப்பதும்தான் இலங்கை தீவின் அரசியல் வரலாறு. இதுவே மாறி மாறி நடந்து வந்திருக்கிறது. இன்று எமது மக்களுக்கு தேவையானது ஒரு அரசியல் தீர்வு மட்டும்தான். இதை இலங்கைத்தீவின் அரசியல் சூழ்நிலையே தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கின்றது. இதை விடுத்து வெறும் சலசலப்பு காட்டுவதற்காகவே இன்றைய சூழலில் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற அடைய முடியாத ஒன்றிற்காக புலம் பெயர் நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே 1980 களின் ஆரம்பங்களில் அமெரிக்காவின் மாசாசூஸ் மாநிலத்திலும், இலண்டனிலும் ஈழப்பிரகடனம் செய்து அதை வெற்றி பெறச்செய்வதற்கான முயற்சிகள் நடந்திருக்கின்றன. அன்றைய சூழலில் அவைகளை ஒரு வகையில் ஏற்க முடிந்தது. ஆனாலும் இன்றைய காலச்சூழலில் வெறும் சலசலப்பு காட்டுவதற்காக மட்டுமே வட்டுக்கோட்டை தீர்மானத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டு உங்கள் மத்தியில் சிலர் வருகின்றார்கள். தீர்மானங்களும் பிரகடனங்களும் வெறுமனே சலசலப்பு காட்டுவதற்காக அல்ல. அவைகள் எமது மக்களின் நிம்மதியான வாழ்விற்கும் நீடித்த அரசியல் உரிமை சுதந்திரத்திற்கும் வழி காட்டுவதற்காகவே இருக்க வேண்டும்.

இது வரை கிடைத்திருந்த தீர்வுகள் அனைத்தையும் அரை குறை தீர்வுகள் என்று கூறி சுயலாப அரசியலுக்காக தட்டிக்கழித்து வந்ததினால் நாம் எமது இலக்கு நோக்கி முன்னேற முடியாமல் இருந்திருக்கின்றோம். ஆகவே இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்தி அதற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டு ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வும் அரிசியலுரிமையும் பெற்ற சுதந்திர பிiஐகளாக எமது மக்கள் வாழ முடிந்த வாழும் சூழலை நோக்கி நாம் முன்னேறுவதே நடை முறைச்சாத்தியமான வழி முறையாகும். இதுவே அனைத்து கட்சிகளாலும் குறிப்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடிந்த ஒன்றாகும். ஆகவே சூழ்நிலைக்கு ஒவ்வாத வெற்றுக்கோசங்களும், வெறும் சுதந்திரப்பிரகடனங்களும் எமது இலக்கு நோக்கி முன்னேறிச்செல்ல முடிந்த நடை முறைச்சாத்தியமான வழிமுறைகளை முற்றாக மூடிவிடுவதற்கான இன்னொரு முயற்சியாகவே கருதப்படும். இதனால் எமது மக்கள் தொடர்ந்தும் அவலங்களை சந்திக்க வேண்டிய துயரங்கள் நிகழவே வழி வகுக்கும்.

எமது நடைமுறைச்சாத்தியமான வழிமுறையின் பக்கம் அனைவரும் அணிதிரண்டு வெற்றுக்கோசங்களை நிராகரிக்க முன்வரவேண்டும் என்பதே தாயகத்தில் வாழும் எமது மக்களின் விருப்பங்களாகும். நடைபெறப்போகும் வாக்கெடுப்பில் சிந்தித்து செயற்படுமாறு தாயகத்தில் அவலப்படும் எமது மக்களின் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.

ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி
நோர்வே பிராந்தியம்.
08. 05. 09

http://www.tamilnation.org/images/selfdetermination/vk_1.jpg
http://www.tamilnation.org/images/selfdetermination/vk_2.jpg
http://www.tamilnation.org/images/selfdetermination/vk_3.jpg





நன்றி: தமிழ்தேசியம் (வட்டுக்கோட்டைத் தீர்மானம்)

Sunday, May 3, 2009

தமிழ் அமைச்சர்கள் இடம்பெயர்ந்த மக்கள் சந்திப்பு !