www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Monday, August 16, 2010

கிளிநொச்சி மாவட்ட தொழில் முயற்சியாளருக்கான கருத்தரங்கு!

கிளிநொச்சி மாவட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான கருத்தரங்கின் இறுதிநாள் நிகழ்வு இன்று 2010.08.16 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது, இந்நிகழ்வில் அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் கலந்து கொண்டார்.

வன்னி மக்கள் எல்லாவற்றையும் இழந்த நிலையில் மீள்வாழ்வுக்குத் திரும்பியுள்ள இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு வங்கிகள் அனைத்தும் இலகு கடனை இலகு முறையில் வழங்கி அவர்களின் ஒளிமயமான வாழ்கைக்கு உதவ முன்வர வேண்டும். தொழில் முயற்சியாளர்கள் தொழில் வாய்ப்புக்களைத் தேர்ந்தெடுக்கும் போது மூலப்பொருள், சந்தை வாய்ப்பு போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் இதற்கு எமது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் உங்களுக்கு உதவத் தயாராகவுள்ளாரெனவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் வடமாகாண மத்திய வங்கி முகாமையாளர் திரு.சிறிதரன், அரசாங்க அதிபர், வங்கி முகாமையாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

கிளிநொச்சி முக்கொம்பன், சின்ன பல்லவராயன்கட்டில் அறுவடை விழா!

கிளிநொச்சி முக்கொம்பன், சின்ன பல்லவராயன்கட்டு அறுவடை விழா இன்று 2010.08.16 ஆம் திகதி சின்ன பல்லவராயன்கட்டு கமக்காரர் அவையின் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார், பூநகரி பிரதேச செயலர், கிளிநொச்சி மாவட்ட உதவி ஆணையர், பூநகரி திட்டமிடல் பணிப்பாளர், மற்றும் கமக்கார அமைப்பு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ் விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் கலந்து சிறப்பித்ததுடன், விவசாயத்தைச் சிறப்பாக மேற்கொள்ளவும் அதற்குத் தேவையான விதை, உழவு இயந்திரம், உரம், கிருமிநாசினி போன்றவற்றை நிவாரண முறையில் பெறுவதற்கும், உங்களது கிராம கூட்டுறவுச் சங்க அரிசி ஆலைகளை மீள இயக்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதுடன்,
சின்ன பல்லவராயன்கட்டு முன்பள்ளி, மற்றும் தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களுக்குமாக இரண்டரை இலட்சம் ரூபாவினை இவ் வருட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து ஒதுக்குவதாகவும் பா.உ. சந்திரகுமார் தெரிவித்தார்.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

கிளாலி கண்மணி மாதா தேவாலய திருப்பலி!

பல்வேறு இடம்பெயர்வின் பின்னர் மீளக் குடியேறிய மக்கள் பன்னிரண்டு வருடங்களாகப் பூசைகளின்றி இருந்த கிளாலி கண்மணி மாதா தேவாலயத்தைப் புனருத்தாரணம் செய்ததைத் தொடர்ந்து கடந்த 2010.08.15 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை திருப்பலி பூசை ஒப்புக் கொடுக்கப்பட்டது. இந் நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம். சந்திரகுமார், சில்வேஸ்த்திரி அலஸ்ரின் போன்றோரும் கலந்து கொண்டனர்.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

கிளிநொச்சி இளைஞர் கழக மாவட்ட விளையாட்டு விழா !

இளைஞர் கழக மாவட்ட விளையாட்டு விழா - 2010, கிளிநொச்சி கனகபுரம் மைதானத்தில் கடந்த 15 ஆம் திகதி மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரி திரு. தவேந்திரன் தலைமையில் விமரிசையாக நடைபெற்றது, இவ் விளையாட்டு விழாவுக்கு பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான எம். அசோக் சந்திரகுமார் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.

விழாவில் பங்கேற்ற கரைச்சி பிரதேச சபை, கண்டாவளை பிரதேச சபை, பளை பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை ஆகியவற்றில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.

கண்டியில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு போட்டிக்காக வடமாகாணத்தின் கிளிநொச்சி சார்பாக 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கு பற்றவிருக்கும் செல்வி. விமலாதேவிக்கும் கராட்டி போட்டி பெண்கள் பிரிவில் பங்கேற்கவிருக்கும் செல்வி. செல்விகா ஆகியோருக்கு ஊக்குவிப்புப் பணமாக தலா 5000 ரூபாவினை, பா.உ. சந்திரகுமார் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிதியிலிருந்து வழங்கியதுடன், இம் மாவட்டத்திலிருந்து தேசிய இளைஞர் சேவை மன்ற போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் அணிக்குரிய விளையாட்டு உடைகளை தான் வழங்குவதாகவும் தெரிவித்தார்.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

கிளிநொச்சி சாந்தபுரம் மக்களுடன் பா.உ. சந்திரகுமார்!

வன்னி யுத்தத்தில் சிக்குண்டு நிற்கதியாகியுள்ள கிளிநொச்சி சாந்தபுரம் மக்களை 15.08.2010 ஆம் நாளன்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான எம்.அசோக் சந்திரகுமார் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அம் மக்கள் தங்களை வெகுவிரைவில் தங்களது சொந்த இருப்பிடங்களுக்குச் செல்வதற்கு அனுமதி பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்ட போதிலும், வெகு விரைவில் உங்களது சொந்த இருப்பிடங்களுக்குச் செல்வதற்கு தான் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்ததுடன், இவ் வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களின் குறைபாடுகளை கேட்டறிந்து அவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்குவதாக பா.உ. சந்திரகுமார் குறிப்பிட்டார்.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.