
அக் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், மேலதிக உதவி அரசாங்க அதிபர், வடமாகாண ஆளுநரின் பிரதிப் பிரதம செயலாளர், திணைக்களங்களின் தலைவர்கள், கிராம அலுவலர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள், பொது மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பல்வேறு தேவைகளை எதிர்நோக்கியுள்ளனர், இவர்களின் தேவைகளை நிறைவேற்றி அவர்களை இயல்பு வாழ்க்கைக்காக தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென பா.உ. சந்திரகுமார் குறிப்பிட்டார்.
மீள்குடியேறிய மக்களின் பல பிரச்சினைகள் கேட்டறியப்பட்டு அவற்றில் இனங்காணப்பட்ட பிரச்சினைகள் உடனடித் தீர்வுக்காக பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிக்கப்பட்டது.
மின்சாரம், நீர் விநியோகம், வீதி, மருத்துவம், கல்வி, போக்குவரத்து, தொழில் முயற்சிகளான விவசாயம், நன்னீர் மீன்பிடி, வர்த்தகம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டது.
