Follow @jananayakan
தமி்ழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வன்னி யுத்தத்தில் ஸ்ரீலங்கா படையினரால் கொல்லப்பட்டதாக செய்திகளும், வீடியோ படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந் நேரத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் தனது குடும்பத்தினருடனும் மற்றும் தளபதிகள் சிலருடனும் எவ்வித ஆபத்துமின்றி உயிருடன் இருப்பதாக விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுத் தொடர்பாளர் கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் அல்லது செல்வராஜா பத்மநாதன் ஊடகங்களுக்குச் செய்தி வெளியிட்டு இருந்தார்.
செல்வராஜா பத்மநாதனின் செய்தியை உறுதிப் படுத்தக் கூடியவாறு இந்திய தமிழ் சஞ்சிகையான "நக்கீரன்" தனது இவ்வார பதிப்பில் "உயிருடன் உள்ளார் பிரபாகரன்" எனும் தலைப்பில் கட்டுரை பதிவாகி உள்ளது, அத்துடன் வே.பிரபாகரன் விடுதலைப் புலிகளுக்கே உரித்தான இராணுவ சீருடையில் மிடுக்காக அமர்ந்திருந்து பிரபாகரன் கொல்லப்பட்டதாக தொலைக்காட்சியிலும் மற்றும் பத்திரிகையிலும் வெளியான செய்தியை புன்முறுவலுடன் பார்வையிடும் காட்சியைப் போன்று கணினியில் உதவி கொண்டு தத்துரூபமாக கிராபிக்ஸ் முறையில் வடிவமைத்துள்ளார் நக்கீரன்.
இந்தப் படத்தினை மூலாதாரமாகக் கொண்டே நக்கீரன் புதிய படத்தினை தயாரித்துள்ளார், ஆனால் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என கலங்கி நிற்கும் பிரபாகரன் விசுவாசிகளை மேலும் அவஸ்தைப்படுத்துவதாகவே இப் படம் அமைந்துள்ளது என்பதை இவ்விடத்தில் குறிப்பிடுதல் அவசியம்.
2003.03.02 ஆம் திகதி தமிழ்நெட் இணையத் தளத்தில் வெளியான அன்ரன் பாலசிங்கத்துடன் பிரபாகரன் உரையாடும் படத்தினை மாற்றி வடிவமைத்த நக்கீரனின் படத்தினை உண்மையென நம்பிய புலம்பெயர் ஊடகமான தீபம் தனது செய்தியறிக்கையில் இப்படத்துக்கு முன்னுரிமை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.