www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Sunday, August 30, 2009

தேசிய காங்கிரஸ் கட்சி மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆற்றிய உரை


அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் அதாவுல்லா தலைமையில் நேற்று நடைபெற்ற தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்றது, இந் நிகழ்வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகவும் மற்றும் விசேட அதிதியாக அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

தேசிய காங்கிரஸ் கட்சி மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆற்றிய உரை:

சமாதானத்தின் காவலன் ஜனநாயகத்தின் நாயகன் மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களே!
சமூகங்களுக்கிடையிலான உறவிற்கு கை கொடுத்து நிற்கும் எமதினிய சகோதரர் அதாவுல்லா அவர்களே!
அவரது கட்சியின் உறுப்பினர்களே!
மத்திய மற்றும் மாகாண அமைச்சர்களே!
அரசியல் கட்சிகளின் தலைவர்களே!
மக்கள் பணியை சுமந்து நிற்கும் கட்சியின் தொண்டர்களே!

அனைவருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பாக எமது வணக்கங்கள். அஸ்ஸல்லாமு அலைக்கும்.

இஸ்லாம் என்பது ஒரு அரபிச்சொல்! அதன் தமிழ் அர்த்தம் அமைதியை அடைவதற்கான நெறி என்று சொல்லப்படுகின்றது.

எமது தேசத்தில் அமைதியையும் சமாதானத்தையும் அடைவதற்காக எமது சகோதர மக்களாகிய இஸ்லாமிய மக்களை நீதி நெறியின் வழி நின்று இன்று வழி நடத்தி வந்திருப்பவர் எமது சகோதரர் அதாவுல்லா அவர்கள்.

கௌரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் முன்னெடுத்து வருகின்ற சமாதானத்திற்கான பயணத்தில் இறுதிவரை தோள் கொடுத்து வந்த சகோதரர் அதாவுல்லா அவர்கள் எமது தேசத்தில் அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்கும் இந்த புனித இலட்சிய பயணத்தின் வெற்றிக்காக பெரும் பங்கை ஆற்றியிருக்கின்றார்.

நீங்கள் விரும்பும் புனித மெக்காவிற்கான பயணம் எந்தளவிற்கு புனிதமானதோ அதே அளவிற்கு சமாதானத்திற்கான பயணமும் புனிதமானது என்றே நான் கருதுகின்றேன்.

ஆகவேதான் எமது சகோதர மக்களாகிய உங்களது பிரதிநிதியாக யாழ்ப்பாணத்திற்கு வந்து நடந்து முடிந்த எமது யாழ். மாநகர தேர்தலின் வெற்றிக்காக சகோதரர் அதாவுல்லா அவர்களும் அர்ப்பண உணர்வுகளோடு உழைத்திருக்கின்றார்.


பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகளிலும் பத்திரிகை அறிக்கைகளிலும் அவரது கருத்துக்களை நான் அவதானித்திருக்கின்றேன். அவர் மேடைகளில் பேசும்போது அவரது பேச்சாற்றலை கண்டிருக்கின்றேன். ஓட்டுமொத்த தமிழ் பேசும் மக்களின் மீதும் அவர் கொண்டிருக்கும் நேசத்தை அவரது கருத்தில் கண்டிருக்கின்றேன். இன மத சமூக ஐக்கியத்திற்கான விருப்பங்களை அவரது நடைமுறையில் கண்டிருக்கின்றேன்.

யாழ். குடாநாட்டில் அவர் பேசிய கருத்துக்களை எமது மக்களே என்னிடம் பல தடவைகள் வியந்து பாராட்டியிருக்கின்றார்கள்.

எமது இலங்கைத்தீவில் வாழுகின்ற அனைத்து இன மத சமூக மக்களாலும் மரியாதைக்குரியவராக போற்றிப்புகழப்படுகின்ற ஒருவர் மக்களாகிய உங்களை வழி நடத்திச் செல்லுகின்ற ஒரு தலைவராக உங்களுக்குக் கிடைத்திருக்கின்றார். அதை நினைத்து நீங்கள் அவரை மகிழ்ந்து பாராட்ட வேண்டும்.

கடந்துபோன எமது தேசத்தின் வரலாறு இரத்தத்தினால் எழுதப்பட்டிருக்கின்றது. யுத்தத்தினால் எமது தேசம் சிதைக்கப்பட்டிருந்தது. யுத்தத்தில் இருந்தும் இரத்தத்தில் இருந்தும் எமது தேசத்தை நாம் அனைவரும் ஒன்று திரண்டு மீட்டிருக்கின்றோம்.

யுத்தம் ஓய்ந்து விட்டது. இரத்தம் நின்று விட்டது. ஆனாலும் இனித்தான் எமக்கு முன்பாக பாரிய வரலாற்றுக் கடமைகள் யாவும் பாரிய சுமைகளாக எழுந்து நிற்கப்போகின்றன.

எமது இலங்கைத்தீவில் அனைத்து இன மத சமூக மக்களும் சரிநிகர் சமனாக வாழும் புதியதொரு சூழலை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு தேவையானது நடைமுறைச்சாத்தியமான ஒரு அரசியல் தீர்வு என்றுதான் நான் நம்புகின்றேன்.

இன்று கிழக்கு மாகாணத்தில் ஒரு மாகாண சபை ஆட்சி நிறுவப்பட்டிருக்கின்றது. அதுபோல் வடக்கிலும் ஒரு மாகாண சபை ஆட்சி என்பது உருவாக்கப்பட வேண்டும். அதற்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதிலிருந்து தொடங்கி ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வும் சம உரிமையும் என்ற எமது இறுதி இலக்கு நோக்கி நாம் நகர வேண்டும். இத்தகைய சூழலில்தான் தேசிய காங்கிரஸ் கட்சியின் இந்த வருடாந்த மாநாடு இன்று நடந்து கொண்டிருக்கின்றது.

எமது எண்ணங்கள் யாவையும் எமது ஜனாதிபதி அவர்கள் ஈடேற்றி வைப்பார் என்ற நம்பிக்கை எமக்குண்டு. நம்பிக்கைதான் வாழ்க்கை. வுhழ்க்கைதான் நம்பிக்கை. இந்த இரண்டையும் பிரித்துப்பார்க்க முடியாது.

கொடுங்கள்! பெற்றுக்கொள்வீர்கள். இதுதான் நாம் கடைப்பிடிக்க வேண்டிய தத்துவம். மக்களாகிய நீங்கள் அதாவுல்லா போன்ற அரும்பெரும் தலைவர்களுக்கு உங்களது ஆதரவை கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும்போது நிம்மதியான வாழ்வினை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.

அதுபோன்று எமது இனிய சகோதரர் அதாவுல்லா அவர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களது அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவினை கொடுக்க வேண்டும். இதனால் அவர் மக்களாகிய உங்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய அனைத்தையும் பெற்றுக்கொடுப்பார் என்றே நான் நம்புகின்றேன்.

கடந்த கால எதிர்ப்பு அரசியலால் யாரும் எதையும் சாதிக்க முடிந்திருக்கவில்லை. ஆதனால் எமது மக்களுக்கு அழிவுகளை மட்டுமே அவர்கள் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இந்த அனுபவங்களில் இருந்துதான் இணக்க அரசியல் நிலைப்பாட்டை நாம் எமது விருப்பங்களாக ஏற்றுக்கொண்டிருக்கின்றோம்.

புலிகளின் தலைமையின் பிரச்சினை வேறு. தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை வேறு. இரண்டையும் பிரித்துப்பார்த்து தனது கடமைகளை ஆற்றும் ஜனாதிபதி ஒருவரை நாம் பெற்றிருக்கின்றோம்.

புலித்தலைமையின் பிரச்சினைகள் அவர்கள் விரும்பியது போலவே முடிந்து விட்டது. ஆனாலும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை ஜனாதிபதி அவர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார். அதற்கு ஆதரவாகவும் உந்து சக்தியாகவும் நாம் அனைவரும் இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றேன்.

இன மத சமூக முரண்பாடுகளை களைந்து அனைத்து இன மத சமூக மக்களுக்குமான உறவுப்பாலமாக அனைத்து தலைவர்களும் தொடர்ந்தும் உழைப்பதற்கு முன்வர வேண்டுமென நான் எதிர்பார்க்கின்றேன்.

ஏமதினிய சகோதரர் அதாவுல்லா அவர்களின் உறுதியான தலைமையினை ஏற்று மக்களாகிய நீங்கள் நிரந்தரமான மகிழ்ச்சிக்காகவும் நிரந்தரமான அமைதிக்காகவும் எமது தேசத்தின் உயர்ச்சிக்காகவும் அணி திரண்டு நிற்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இந்த வருடாந்த மாநாட்டை வாழ்த்தி வணங்கி உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளுகின்றேன்.

அஸ்ஸல்லாமு அலைக்கும்.

நன்றி

Wednesday, August 12, 2009

மனமார்ந்த நன்றி - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


நடந்தேறிய மாநகர, நகரசபைத் தேர்தலில் ஈபிடிபியை ஆதரித்து வாக்களித்த வாக்களித்த அனைத்து வாக்காளப் பெருமக்களுக்கும் ஈபிடிபியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துள்ளார்.

Tuesday, August 11, 2009

யாழ்.மேயர், துணை மேயர் தெரிவு !

யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆட்சியதிகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வசமாகியுள்ளது, இம் மாநகரசபைக்கான மேயர், துணை மேயர் பதவிகளை கட்சியின் செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உரியவர்களுக்கு வழங்கிக் கௌரவித்தார்.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு மாவட்டங்களிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் 28 வருட காலமாக ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியதுடன் அமைச்சுக்களில் உயரிய பதவிகளை வகித்த சர்வதேச லயன்ஸ் கழகத்தின் சிறந்த ஆலோசகர் என்ற பட்டத்தையும் தனதாக்கிக் கொண்ட திருமதி.யோகேஸ்வரி பற்குணராசா யாழ்.மாநகரசபையின் மேயராகவும், றீகன் எனப்படும் திரு.துரைராஜா இளங்கோ யாழ்.மாநகரசபையின் துணை மேயராகவும் நியமனம் பெற்றுள்ளனர்.

Sunday, August 9, 2009

தேர்தல் விகிதாசார வாக்களிப்பு வரைபு





யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தலுக்கான விகிதாசார வாக்களிப்பு வரைபு ஒரே பார்வையில்!

Saturday, August 8, 2009

யாழ்.மாநகர, வவுனியா நகரசபை தேர்தல் முடிவுகள் - 2009


Friday, August 7, 2009

யாழ். மாநகரசபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்துக்கு 75 சதவீத வாக்குகள் !

யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது, இன்று நள்ளிரவுக்குப் பின்னர் அதன் பெறுபேறுகளை அறியக்கூடியதாக இருக்கும்.

இத் தேர்தலுக்கு முன்னோடியாக யாழ். மாநகரசபைத் தேர்தலுக்காக "ஜனநாயகன்" தளத்தினால் நடாத்தப்பட்ட இணையக் கருத்துக் கணிப்பில் அதிகூடிய வாக்குக்களை வெற்றிலைச் சின்னத்தைக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ளது.

ஈபிடிபி அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 75 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடத்திலும், ஈபிஆர்எல்எவ், புளொட் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர் விடுதலைக் கூட்டணி 14 சதவீத வாக்குக்களைப் பெற்று இரண்டாம் இடத்திலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 11 சதவீதத்தினைப் பெற்று மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

இத் தேர்தல் கருத்துக் கணிப்பில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு எவ்வித வாக்குக்களுக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது இணையக் கருத்துக் கணிப்பு மாத்திரமே, நிஜ தேர்தல் என்ன முடிவினைக் கொண்டு வருகின்றதோ தெரியாது, நாளை வரை பொறுத்திருப்போம்!

Tuesday, August 4, 2009

யாழ் மாநகர சபை கூட்டணி வேட்பாளர் ஜெயந்தன் தேர்தலில் ஈபிடிபியை ஆதரிக்க முடிவு !

யாழ் மாநகரசபை தேர்தலிற்காக ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியில் வேட்பாளராகக் களமிறங்கிய யாழ்ப்பாணம் பல்கலைக் கழக உடற்பயிற்சி விஞ்ஞான பீட மாணவன் ஜெயசீலன் ஜெயந்தன் இன்றில் இருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை ஆதரித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக உழைக்கவிருப்பதாக யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார்.

யாழ் பல்கலைக் கழகத்துக்கு இன்று விஜயம் செய்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான திரு.டக்ளஸ் தேவானந்தாவினை நேரில் சந்தித்த திரு.ஜெயசீலன் ஜெயந்தன் தனது ஆதரவினைத் தெரிவித்து வெற்றிலைச் சின்ன வெற்றிக்காக பாடுபடுவேன் எனவும் உறுதி வழங்கினார்.

மாநகர சபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் ஜெயசீலன் ஜெயந்தன் பகிரங்க வேண்டுகோள் விடுத்தார்.

Monday, August 3, 2009

தேர்தல் பிரசுரங்கள் - 2009



யாழ்ப்பாணத்தில் வன்முறையில் ஈடுபடும் சங்கரியின் கூட்டணி !

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் வெற்றிலைச் சின்னத்தில் இலக்கம் 3 இல் போட்டியிடும் ஈபிடிபி வேட்பாளர் மனுவல் மங்களநேசனின் அரியாலை வீட்டினுள் கடந்த 2009.08.02 ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் அத்துமீறி நுளைந்த தமிழர் விடுதலைக் கூட்டணி ஆனந்தசங்கரியின் உதவியாளர்கள் அபேட்சகர் மனுவல் மங்களநேசன் அவர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

யாழ். மாநகரசபைத் தேர்தல் சூடு பிடித்துள்ள இந்த நேரத்தில் ஜனநாயக வழி முறைகளைக் கையாள வேண்டிய அகிம்சையைப் போதிக்கக் கூடிய தந்தை செல்வாவின் வழித் தோன்றல்கள் எனக் கூறிக் கொள்ளும் சகிப்புத் தன்மைக்கான விருது பெற்ற ஆனந்தசங்கரி ஈபிடிபி யின் தேர்தல் வெற்றியைச் சகித்துக் கொள்ளாமல் வன்முறையில் நாட்டம் கொள்வது காத்திரமானதாக அமையவில்லை. தாக்குதலுக்கு இலக்கான மனுவல் மங்களநேசன் காயங்களுள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத் தாக்குதல் சம்பவத்தையடுத்து யாழ். மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 வேட்பாளர்கள் உட்பட 10 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.