Follow @jananayakan
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் இராமலிங்கம் அரங்கில், வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் நடாத்தும் தமிழ் இலக்கியப் பெருவிழா நேற்று மாலை (08.10.2009) மேள தாள வாத்தியங்கள் முழங்க ஆரம்பமானது.
ஈபிடிபி செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நல்லூர் பிச்சையப்பா ரஜீவன் குழுவினரின் நாதஸ்வர இசைக்கு மத்தியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.
இவ்விழாவில் வரவேற்பு நடனம், மீனவ நடனம், பாம்பு நடனம், வள்ளி திருமணம் இசை நாடனம் போன்ற பல்வேறு நடன நிகழ்வுகள் அரங்கேறின.
நேற்றைய தமிழ் இலக்கியப் பெருவிழாவில் யாழ்.அரசாங்க அதிபர் திரு.கே.கணேஷ், கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.இளங்கோவன், வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி என்.ஸ்ரீதேவி உட்படப் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பல்வேறு அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இசை வழங்கிய நாதஸ்வர தவில் கலைஞர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவித்தார்.
மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.