
ஆனைப்பந்திப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிரத்தியேக மேடையில் இருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, மற்றும் வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் ஆகியோர் இந்தப் பண்பாட்டுப் பேரணியைப் பார்வையிட்டனர்.
யாழ். இந்துக் கல்லூரியில் இராசநாயகம் முதலியார் அரங்கில் கலாபூஷணம் இராசு சுந்தரமூர்த்தி குழுவினரின் மங்கள இசையுடன் தமிழ்தாயின் உருவச்சிலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் ஆளுநர் சந்திரசிறியும் மலர் மாலை அணிவிக்க பல்வேறு நடன, நாடக நிகழ்வுகளும் அரங்கேறின.
