இவர்களை மலேசியாவுக்கு அனுப்பும் முயற்சிகளை முன்னெடுக்கும் நோக்கில் அமைச்சர் மிலிந்த மொரகொட மற்றும் பிரதி அமைச்சர் வீ.புத்திசிகாமணி போன்றோர் கொழும்பு சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் கோவிலில் வைத்து சரணடைந்த விடுதலைப் புலிகள் எழுவருக்கும் கடவுச்சீட்டு, விஸா, மற்றும் விமானச்சீட்டு போன்றவற்றை வழங்கினர்.
விடுதலை புலிகள் அமைப்பில் செயற்பட்டு அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 147 இளைஞர்கள் இதற்கு முன்பு மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக அனுப்பி வைக்கப்பட்டதைப் போன்று, சரணடைந்த ஏனைய விடுதலைப் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்குமென அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.