www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Wednesday, June 1, 2011

கிளிநொச்சியில் தம்புள்ள மாதிரியிலான புதிய நுகர்வுச் சந்தை !

கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் அமைக்கப்படவுள்ள புதிய நுகர்வுச் சந்தை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 2011.06.01ம் திகதி ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், வட மாகாண உள்ளூராட்சி கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், கரைச்சி பிரதேச செயலாளர் நாகேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மோகனபவன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச சபை செயலாளர் தவசோதி, நகர அபிவிருத்தி சபை பணிப்பாளர் இராஜரட்ணம், ஈபிடிபி கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன், கிராம அலுவலர்கள் மற்றும் மக்கள் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சியில் அம்பாள்குளம் பகுதியில் தற்போது இயங்கி வரும் பொதுச் சந்தையை தம்புள்ளை மாதிரியிலான பொருளாதார மையமாக மாற்றி அமைப்பதோடு ஏற்கனவே பரிசீலிக்கப்பட்டதற்கு அமைவாக கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் புதிய நுகர்வுச் சந்தையினை விரைவில் அமைப்பது பற்றி இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

புதிய சந்தையின் மாதிரி வரைபடம் பற்றியும் தற்போதுள்ள சந்தையில் கழிவகற்றல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. விரைவில் புதிய நுகர்வுச் சந்தையின் ஆரம்ப கட்டப் பணிகளை முன்னெடுக்கும்போது ஏற்கனவே சந்தையில் வியாபார நிலையங்கள் வைத்திருந்தவர்களுக்கு இட ஒதுக்கீடுகளை மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.