www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Saturday, June 11, 2011

கிளிநொச்சி ஜெயந்திநகர் - கணேசபுரம் எல்லையிலுள்ள பாலத்திற்கான அடிக்கல் நடுகையில் கலந்து கொண்டார் பா.உ. சந்திரகுமார்.

2011.06.11ம் திகதி கிளிநொச்சி ஜெயந்திநகர் கணேசபுரம் எல்லையிலுள்ள பாலத்திற்கான அடிக்கல் நடுகை விழா கிராம அலுவர் காண்டீபன் தலைமையில் இடம்பெற்றது
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதம பொறியியலாளர் ஜெகானந்தன் கிளிநொச்சி நிறைவேற்று பொறியியலாளர் கௌசீகன் நீர்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பொறியியலாளர் கருணாநந்தராஜா ஈ.பி.டி.பி.யின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் ஜெயந்திநகர் கணேசபுரம் கிராம அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகள் மாதர் அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.



வட மாகாண ஆளுநர் சந்திரசிறி அவர்களின் ஒத்துழைப்புடன் பா.உ. சந்;திரகுமார் அவர்கள் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக இருபத்தினான்கு அடி அகலமான இப்பாலம் பதினெட்டு இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. 

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் உரையாற்றுகையில் இப்பிரதேச மக்களுக்கு மிக நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைக்கு துரித கதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது  இவ்வாறுதான் மக்கள் தாம் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் முயற்சிகளை நாம் நடைமுறை ரீதியில் மேற்கொண்டு வருகின்றோம். முற்றுமுழுதாக அழிந்துபோன ஒரு பிரதேசத்தின் உட்கட்டுமானப் பணிகளையும் மக்களின் வாழ்வாதாரத்தினையும் குறுகிய காலத்திற்குள் வழமைக்கு கொண்டுவர முடியாது.  ஆனால் நாம் மக்களுக்கான மகிழ்ச்சியான இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த எம்மாலான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் அதற்காக நாம் அக்கறையோடு அரசோடு இணைந்து செயற்பட்டு வருகின்றோம் என்றும் தெரிவித்தார். 
  
எனவே மக்களும் பலமான துரித அபிவிருத்தியை முன்னெடுகின்ற கரங்களை இறுக்கப்பற்றி பிடிக்க வேண்டும். அதன் மூலம் தங்களுடைய வாழ்வையும் பிரதேசத்தினையும் வளமாக்கிக் கொள்ள முடியும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் மக்கள் எப்பொழுதும் உணர்ச்சி வசப்பட்ட பேச்சுகளுக்கு இடம்கொடுக்க கூடாது என்றும்  அது எப்பொழுதும் மக்களுக்கு அழிவையே பெற்றுத்தரும் இதற்கு கடந்த காலம் எமக்கு ஒரு நல்ல உதாரணம் எனவே அவ்வாறானவர்களை மக்கள் நிராகரித்து நடைமுறைக்குச் சாத்தியமான வழியில் செல்கின்றவர்களை ஆதரித்து ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுகொண்டார். 
 

இந்நிகழ்வின் போது ஜெயந்தி நகரில் முன்பள்ளி அமைப்பதற்கு ஆரம்ப கட்டமாக இரண்டு இலட்சம் ரூபா நிதியினையும் தனது நிதியிலிருந்து ஒதுக்கி தருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தெரிவித்தார். 

மேலதிக படங்களுக்கு...  அழுத்தவும்