யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகில் வைத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷவும் இணைந்து தேசியக் கொடியை அசைத்து கொழும்பு செல்லும் பேரூந்து சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
ஐந்து பேரூந்துக்களில் 120 பொது மக்கள் தங்களது தென் பகுதி நோக்கிய பயணத்தை இன்று காலை 10:30 மணியளவில் ஆரம்பித்தனர், பயண ஆரம்ப விழாவுக்கு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் எஸ். எ. சந்திரசிறி, ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன உட்பட பல்வேறு பிரமுகர்களும் வருகை தந்து சிறப்பித்தனர்.






