www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Thursday, July 30, 2009

யாழ் குடாவில் பரவலாக விற்பனையாகும் போலிப் படிவம் !

வன்னி யுத்தத்தில் இருந்து மீண்டு, தற்காலிக நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் மக்களின் உறவினர்களை ஏமாற்றும் நோக்கில், "தடுப்பு முகாம்களிலுள்ள உறவினர்களை விடுவிப்பதற்கான விண்ணப்பம்" எனப் போலியாகத் தயாரிக்கப்பட்ட படிவம் சில விசமிகளால் நூறு ரூபாய் பணத்துக்கு யாழ் குடாவில் பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகச் செய்திகள் கூறுகின்றன.

இது தொடர்பாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் திரு. டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரித்த போது, இடம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வரும் மக்கள் தற்காலிகமாக நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனரேயன்றி, அம்மக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படவில்லை என்பதே உண்மையாகும், எனவே தடுப்பு முகாம்களில் அம்மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றி சட்டத்திற்கு முரணாக பொதுமக்களிடமிருந்து பணம் பறிக்கும் செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன, ஆகவே பொது மக்கள் இந்த போலி விண்ணப்பப் படிவத்தினை நம்பி ஏமாற வேண்டாமென குறிப்பிட்டார்.