www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Monday, May 30, 2011

வாழ்வாதார உதவிகளினால் மக்கள் உச்ச பயனைப் பெற வேண்டும் - பா.உ. சந்திரகுமார்


கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் லீற்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் 2011.05.30ம் திகதி 135 பயனாளிகளுக்கு விவசாயம், வியாபாரம் போன்ற வாழ்வாதார உதவிகளை பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன், கரைச்சி பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் அமல்ராஜ், இராணுவ அதிகாரிகளான மேஜர் இராஜபக்ஷ, கப்டன் குமார, லீற்ஸ் நிறுவன மாவட்ட அதிகாரி இந்திரன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.விமலராணி மற்றும் கிராமசேவையாளர் சண்முகநாதன் ஆகியோர் வழங்கினர்.

கிளிநொச்சி - அக்கராயன் வீதி புனரமைப்புப் பணியினை ஆரம்பித்து வைத்தார் பா.உ. சந்திரகுமார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் அவர்களின் துரித நடவடிக்கையின் பயனாக, கடந்த கால வன்செயலில் பாதிப்படைந்த கிளிநொச்சி - அக்கராயன் வீதியின், சேவியர் கடைச் சந்தி தொடக்கம் ஸ்கந்தபுரம் வரையான 15 கிலோ மீற்றர் நீளமான வீதிப் புனரமைப்புப் பணி 2011.05.30ம் திகதியான இன்று ஆரம்பமானது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச கெயார் நிறுவன அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்.

2011।05।30ம் திகதியாகிய இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் கெயார் நிறுவனத்தினரால் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மீளாய்வு செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.

Monday, May 23, 2011

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் உள்ளூராட்சி வார விழா நிகழ்வு

2011 மே மாதம் 23 ஆம் திகதி (இன்று) வலிகாமம் தெற்கு பிரதேச சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளூராட்சி வார விழா நிகழ்வு இராமநாதன் கல்லூரி மண்டபத்தில் பிரதேச சபை செயலாளர் சுலோசனா தலைமையில் இடம்பெற்றது.

வன்னேரிக்குளம் பிரதேச வீதிகள் பா.உ. சந்திரகுமாரால் புனர்நிர்மாணம்

2011 மே மாதம் 23 ஆம் திகதி (இன்று) கிளிநொச்சி வன்னேரிக்குளம் பிரதேசத்திலுள்ள திக்காய்க் குளம், குஞ்சுக் குளம் கிராமங்களுக்கான சிறு வீதிகளைப் புனர் நிர்மாணம் செய்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

Friday, May 20, 2011

சேதமடைந்த புதுக்குடியிருப்பு பால நிர்மாணம் - பா.உ. சந்திரகுமார் நடவடிக்கை

கிளிநொச்சிலுள்ள சேதமடைந்திருந்த புதுமுறிப்பு பாலத்தினை புனரமைத்து மக்கள் போக்குவரத்துச் செய்ய தேவையான நடவடிக்கையினை, ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் மேற்கொண்டுள்ளார்.

Wednesday, May 18, 2011

பா.உ. முருகேசு சந்திரகுமார் 2011.05.17 ம் திகதி கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் 2011.05.17 ம் திகதி கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு.

Tuesday, May 17, 2011

பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் - வீடியோ தொகுப்பு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் அண்மையில் கலந்து கொண்ட சில நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு.