Follow @jananayakan
கிளிநொச்சிலுள்ள சேதமடைந்திருந்த புதுமுறிப்பு பாலத்தினை புனரமைத்து மக்கள் போக்குவரத்துச் செய்ய தேவையான நடவடிக்கையினை, ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் மேற்கொண்டுள்ளார்.
2011 மே 19 ஆம் திகதி பா.உ. சந்திகுமார் அடங்கலாக வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வட மாகாணப் பணிப்பாளர் சிவராஜலிங்கம், திணைக்கள கிளிநொச்சி மாவட்ட பிரதான பொறியியலாளர் ஜெயவீரசிங்கம், நிறைவேற்றுப் பொறியியலாளர் கௌசிகன் மற்றும் இராணுவப் பொறுப்பதிகாரி கேணல் அனில் சோமவீர ஆகியோர் புதுமுறிப்பு பாலத்திற்கு நேரில் விஜயத்தினை மேற்கொண்டனர்.
இரண்டு மில்லியன் ரூபா செலவில் விரைவான புனர்நிர்மாணப் பணிகளைச் செய்யத்தக்கதாக எதிர்வரும் 27ஆம் திகதி கேள்வி பத்திரம் மூலம் ஒப்பந்தக்காரர்கள் தெரிவுசெய்யப்பட்டு நிர்மாணப்பணிகள் பூர்த்தியானதும், பஸ் போக்குவரத்திற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படுமென பா.உ. சந்திரகுமார் தெரிவித்தார்.
அதேவேளை கிளிநொச்சி டிப்போ - அக்கராயன் வீதியும் எதிர்வரும் மாதங்களில் நிரந்தரமாக புனரமைப்புச் செய்வதற்கான வேலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளனவெனவும் அத்துடன் யூனியன்குளம் பாலமும் போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் தற்காலிக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.