www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Monday, May 23, 2011

வன்னேரிக்குளம் பிரதேச வீதிகள் பா.உ. சந்திரகுமாரால் புனர்நிர்மாணம்

2011 மே மாதம் 23 ஆம் திகதி (இன்று) கிளிநொச்சி வன்னேரிக்குளம் பிரதேசத்திலுள்ள திக்காய்க் குளம், குஞ்சுக் குளம் கிராமங்களுக்கான சிறு வீதிகளைப் புனர் நிர்மாணம் செய்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் அவர்களும், கரைச்சி பிரதேச செயலாளர் நாகேஸ்வரன், கமநல சேவை திணைக்கள உதவி ஆணையாளர் தயாரூபன், கிராம அலுவலர் பிரிவு நிர்வாக உத்தியோகத்தர் மகேந்திரன், கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் கதிர்காமநாதன், ஈ.பி.டி.பி.யின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் மற்றும் பிரதேசத்தின் மக்கள் அமைப்பு பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களுக்கான வளமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்காக நாம் அதிக கவனம் எடுத்துச் செயற்பட்டு வருகின்றோம், நகரங்களிலிருந்து தொலைவிலுள்ள கிராமங்களினதும் மக்களினதும் வாழ்வாதார மேம்பாட்டுக்காக அதி விசேட கவனம் எடுத்து பல்வேறு செயற்திட்டங்களினூடாக அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றோம், இதேபோல் எதிர்காலத்தில் மற்றைய கிராமங்களையும் சகல அடிப்படை வசதிகளையும் கொண்ட பிரதேசங்களாக மாற்றுவதே எமது நோக்கம் என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சினைகளைக் கேட்டுப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் விரைவில் வன்னேரிக் குளம் மகாவித்தியாலத்திற்கு மின்பிறப்பாக்கி ஒன்றை வழங்குவதற்கு உறுதியளித்ததோடு, அப் பாடசாலையில் க.பொ.த. உயர்தர கலைப் பிரிவை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும், அத்துடன் அப்பிரதேசத்தில் உவர் நீர்த் தடுப்பு அணை அமைப்பதற்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் திட்ட மதிப்பீட்டிற்கு பணிப்புரை விடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.