
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் அவர்களின் துரித நடவடிக்கையின் பயனாக, கடந்த கால வன்செயலில் பாதிப்படைந்த கிளிநொச்சி - அக்கராயன் வீதியின், சேவியர் கடைச் சந்தி தொடக்கம் ஸ்கந்தபுரம் வரையான 15 கிலோ மீற்றர் நீளமான வீதிப் புனரமைப்புப் பணி 2011.05.30ம் திகதியான இன்று ஆரம்பமானது.
முதற்கட்ட ஆரம்பப் பணியை பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் கனரக இயந்திரத்தை இயக்கி ஆரம்பித்து வைத்ததுடன், கடந்தகால போரினால் கிளிநொச்சி மாவட்டத்தில் புனரமைக்கப்படாதிருந்த வீதிகளை நேரில் சென்று பார்வையிட்டார், இதனால் இம் மாவட்டத்திலுள்ள 52 வீதிகள் விரைவில் புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.