www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Monday, May 30, 2011

வாழ்வாதார உதவிகளினால் மக்கள் உச்ச பயனைப் பெற வேண்டும் - பா.உ. சந்திரகுமார்


கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் லீற்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் 2011.05.30ம் திகதி 135 பயனாளிகளுக்கு விவசாயம், வியாபாரம் போன்ற வாழ்வாதார உதவிகளை பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன், கரைச்சி பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் அமல்ராஜ், இராணுவ அதிகாரிகளான மேஜர் இராஜபக்ஷ, கப்டன் குமார, லீற்ஸ் நிறுவன மாவட்ட அதிகாரி இந்திரன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.விமலராணி மற்றும் கிராமசேவையாளர் சண்முகநாதன் ஆகியோர் வழங்கினர்.

கிடைக்கப்பெறும் வாழ்வாதார உதவிகளில் இருந்து மக்கள் உச்சப் பயனைப் பெறவேண்டுமெனவும், வாழ்வாதார உதவிகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற கொள்கையினை வகுத்தே நாம் செயற்பட்டு வருகின்றோம். இதன் அடிப்படையில் நகர்ப்புறம் கிராமப்புறம் என்ற வேறுபாடின்றி உதவிகள் அனைவரையும் சென்றடையும் அதேவேளை பாதிக்கப்பட்ட பகுதிக்கு உதவிகள் கிடைக்கப்பெறவில்லையென இனங்காணப்படுமிடத்து நாம் அப்பகுதிக்கான உதவித்திட்டங்களைக் கொண்டு செல்லவும் தயாராக இருக்கின்றோம்.

மீள் டியேற்றம் நடைபெற்று 18 மாதங்களை எட்டும் நிலையில் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் மக்களுக்கு இலவசமாக பல உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால் எதிர்வரும் காலங்களில் கொடையாளி நிறுவனங்கள் இலவசமாக உதவிகளை வழங்குமென எம்மால் உறுதி கூற முடியாது. ஆனால் பொருளாதாரத்தினை முற்றாக இழந்த மக்களுக்கு உதவிகள் இனாமாக கிடைக்கப் பெறவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. எனவே கிடைக்கப்பெறும் உதவிகளைப் பயன்படுத்தி தொடர் பயனைப் பெறக்கூடிய வகையில் செயற்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.