www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Saturday, June 19, 2010

தோழர் பத்மநாபாவின் 20 ஆம் நினைவு தினம்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி - பத்மநாபா அணியினரால் யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் க.சிவராசா மோகன் தலைமையில் தியாகிகள் தினம் அனுட்டிக்கப்பட்டது.

இந் நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார், வட-கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், நாபா அணியின் செயலர் தி.ஸ்ரீதரன் சுகு ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளென பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தனதுரையில், தோழர் பத்மநாபாவின் 20வது நினைவு தினத்தை இன்றைய தினம் தியாகிகள் தினமாக நினைவு கூரும் இவ்வேளை படுகொலை செய்யப்பட்ட தோழர்கள் எந்த இலட்சியங்களுக்காக தமது உயிர்களை அர்ப்பணித்தார்களோ அவர்களது அந்த இலட்சியங்களை ஈடேற்றுவதற்கு நாம் திடசங்கம் எடுப்பதுடன் ஒரே நோக்கமும் இணைந்து செல்லக் கூடிய கொள்கைகளையும் கொண்ட கட்சிகள் பொதுவான ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நாளாக இன்றைய தியாகிகள் தினம் அமைய வேண்டும்.

அத்துடன் தோழர் பத்மநாபாவின் 20வது தினத்தை நினைவு கூரும் இச்சமயம் நாட்டில் மீண்டும் சுமுக நிலை ஏற்பட்டுள்ளதுடன் அனைவரும் பகிரங்கமாக இணைந்து பத்மநாபாவை நினைவு கூருவதற்கு ஏற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காணக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள இச் சந்தர்ப்பத்தில் நடைமுறைச் சாத்தியமான வழிகளில் உடன்பாட்டை எட்டுவதற்கு ஒருமித்த கருத்துள்ள கட்சிகள் ஒன்று சேர வேண்டியது அவசியமென்றும் வலியுறுத்தினார்.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் முன்பள்ளி மாணாக்கர்களின் விளையாட்டுப் போட்டி

யாழ் மலரும் பூக்கள் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் அனுசரணையுடன் 42 முன்பள்ளிகள் இணைந்து நடாத்தும் விளையாட்டுப் போட்டி 2010.06.19 ஆம் திகதி துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

பிரதம விருந்தினர் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, சிறப்பு விருந்தினர் பாராளுமன்ற உறுப்பினர் எம். சந்திரகுமார், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் என். சண்முகலிங்கன் ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன், வெற்றி பெற்ற சிறார்களுக்கு அதிதிகள் பரிசில்களை வழங்கிக் கௌரவித்தனர்.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி தமிழ்த் தினப் போட்டி!

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் தமிழ்த் தினப் போட்டி ஆரம்ப விழா 2010.06.19 ஆம் திகதி ஆரம்பமாகியது, இந் நிகழ்வைச் சிறப்பிக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் இலங்கையின் நாலாபுறமும் இருந்து வந்து கலந்து கொண்டனர்.

கல்வியமைச்சின் தமிழ் பிரிவுப் பணிப்பாளர் வீ.எஸ். இதயராசாவின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, கல்வி அமைச்சின் மொழியும் அதன் கலாசாரத்திற்குமான பணிப்பாளர் தயா பண்டார, மற்றும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பெருமளவிலான மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

Friday, June 18, 2010

கிளிநொச்சிக்கு அகாஷி, பசில் ராஜபக்ஷ விஜயம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்போக வேளாண்மைச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக 2010.06.18 ஆம் திகதி ஜப்பானின் விசேட தூதுவர் அகாஷி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி, மாவட்ட விவசாயப் பணிப்பாளர் மற்றும் மாவட்ட அரச அதிபர் ஆகியோர் வருகை தந்தனர்.

கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து உழவு இயந்திரங்களும், நீர் இறைக்கும் இயந்திரங்களும், மற்றும் அறுவடை இயந்திரங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

யாழ்.மாவட்ட உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் மக்களை மீளக் குடியமர்த்தல் !

யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள்குடியேற்றம் பெற்ற மக்களை, உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் மீள்குடியேற்றுவது தொடர்பான கலந்துரையாடல் 2010.06.17 காலை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஸ் தலைமையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெனாண்டோ, மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான எம்.அசோக் சந்திரகுமார், யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள், மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

வலிகாமம் வடக்கு, தென்மராட்சி கிழக்கு, வடமராட்சி கிழக்கு அடங்கலான உயர்பாதுகாப்பு வலயப் பகுதி மக்களின் மீள்குடியேற்றம், வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் மற்றும் இவர்களுக்கான நிவாரணத்தை மேலும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைத்துக் கலந்துரையாடினர்.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

Thursday, June 17, 2010

வலைப்பாடு பிரதேச மக்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் - எம்.பி. சந்திரகுமார்.

வலைப்பாடு பிரதேச மீளக்குடியேற்ற மக்களின் நிலைமைகளை கண்டறிவதற்காக 2010.06.16 ஆம் திகதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் சந்திரகுமார் வலைப்பாடுக்குச் சென்று அம் மக்களுடன் கலந்துரையாடினார்.

வலைப்பாடு மீள்குடியேற்ற மக்களுக்கான வீட்டுவசதி, முன்பள்ளிக்கான ஏற்பாடுகள், பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான உதவி, கணவரை இழந்த பெண்களுக்கான சுயதொழில் முயற்சிகள் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சிகள் போன்ற தேவைகளை நிறைவேற்றித் தருமாறு பிரதேச மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இம் மக்களின் கோரிக்கைகளை செவிமடுத்த பா.உ. சந்திரகுமார், கூடிய விரைவில் இம் மக்களின் தேவைகள் அனைத்தும் இனங்காணப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் குறிப்பிட்டார்.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

கிளிநொச்சி வலைப்பாடு பிரதேச மீனவர்களின் பிரச்சனைகள்

கிளிநொச்சி வலைப்பாடு பிரதேச மீனவர்களின் பிரச்சினைகளை கண்டறியும் நோக்கில் 2010.06.16 ஆம் திகதி வலைப்பாடு மீன்பிடி இறங்குதுறைப் பகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் சந்திரகுமார் அவர்கள் விஜயம் செய்தார்.

அங்கு சென்று மீனவர்களைச் சந்தித்து அவர்களின் நாளாந்தப் பிரச்சினைகளையும் தேவைகளையும் அறிந்து அதற்கான முன்னெடுப்புகளை விரைவில் செய்வதாக
பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மீன்களை பழுதடையாமல் வைத்திருக்கத் தேவையான ஐஸ் கட்டிகளை உற்பத்தி செய்யக் கூடிய ஐஸ் தொழிற்சாலையை பூநகரிப் பிரதேசத்தில் அமைத்துத் தரும்படி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வலைப்பாடுக் கடற்பகுதியில் இறால் வளர்ப்பு, அட்டை வளர்ப்புப் பகுதிகளையும் எம்.பி. சந்திரகுமார் சென்று பார்வையிட்டதுடன் இக் கடல் உணவு வளர்ப்புத் திட்டத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் மீனவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் மீள்குடியேற்ற மக்களுக்கு வாழ்வாதார உதவி!

எலைன்ஸ் ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தால் கிளிநொச்சி ஸ்கந்தபுரம் மீள்குடியேற்ற மக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது, இம் மக்களில் 50 பேருக்கு நீர் இறைக்கும் இயந்திரமும் 50 பேருக்கு இருபதினாயிரம் ரூபா பெறுமதியான உதவியும் வழங்கப்பட்டது.

2010.06.15 ஆம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.அசோக் சந்திரகுமார், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், எலைன்ஸ் ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியப் பணிப்பாளர் கேரத், இணைப்பதிகாரி பெரேரா மற்றும் கிராம அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

கிளிநொச்சி விவேகானந்த நகர் கல்கி முன்பள்ளி திறப்புவிழா!

கிளிநொச்சி விவேகானந்த நகர், கல்கி முன்பள்ளியை காவேரி கலாமன்றத்தின் பராம்பரிய கலை நிகழ்ச்சிகள், வரவேற்பு நடனத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அசோக் சந்திரகுமார் 2010.06.15 ஆம் திகதி திறந்து வைத்தார்.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

ஜெயபுரம் தேவன்குளம் புனரமைப்பு

ஜெயபுரம் தேவன்குளத்தைப் புனரமைப்புச் செய்வதனால் 600 ஏக்கர் நிலத்தில் 350 குடும்பங்களுக்கான விவசாயிகள் பயிர்ச் செய்கையை மேற்கொண்டு தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாமென கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு. அரசப்பன் தெரிவித்ததற்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் எம்.அசோக் சந்திரகுமார் அப்பகுதிக்கு 2010.06.16 ஆம் திகதி நேரில் சென்று புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நிலைமைகளை நேற்றைய தினம் ஆராய்ந்தார்.


மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

Tuesday, June 15, 2010

யாழில் நீரியல் வளத்துறைத் திணைக்களப் பணிமனைத் திறப்பு விழா!

மீன்பிடித்துறை நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரட்ன அவர்களால் யாழ்ப்பாணத்தில் 2010.06.14 ஆம் திகதி மீன்பிடித்துறை நீரியல் வளத் திணைக்களப் பணிமனைக் கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் புஞ்சிநிலமே, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அசோக் சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மன்னார் தேவன்பிட்டி மீனவர்களுக்கான இலகு கடன் வழங்கும் நிகழ்வும் குருநகர் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

Monday, June 7, 2010

கிளாலி பிரதேச மீள்குடியேற்ற மக்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் !

கிளாலிப் பிரதேச மக்கள் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் தமது மண்ணிலேயே குடியேறுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியான பின்னர் படை அதிகாரி, பளைப் பிரதேச செயலாளர், கிளாலி கிராம அலுவலர், கிளாலிப் பிரதேச மக்கள் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். அசோக் சந்திரகுமார் போன்றோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

முதற் தடவையாக இப் பிரதேச மக்கள் தமது சொந்த இடங்களைப் பார்வையிட்டதுடன், தமது ஊரின் கண்ணாய் அமைந்துள்ள வீரபத்திரர் ஆலய பொங்கல் விழாவினையும் சிறப்பாக நடாத்தினர்.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

பூநகரி பிரதேச மீள்குடியேற்ற மக்களின் பிரச்சினைகள் தொடர்பான விசேட செயலணி!

பூநகரி பிரதேச மீள்குடியேற்ற மக்களின் பிரச்சினைகள் தொடர்பான விசேட செயலணி மாநாடு 2010.06.03, 04 ஆம் திகதி இரு நாட்கள் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஆசோக் சந்திரகுமார், பூநகரிப் பிரதேச செயலகத் திணைக்களங்களின் தலைவர்கள், அதிகாரிகள், சர்வதேச மற்றும் உள்ளூர் தொண்டர் அமைப்புப் பிரதிநிதிகள், பொதுமக்கள், கிராம சேவையாளர்கள், மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள் மற்றும் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மீள்குடியேற்ற மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் வீட்டு வசதி, குடிநீர், மருத்துவம், சுகாதாரம் கல்வி, விவசாயம், கடற்றொழில் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சனைகள் தொடர்பாக இம் செயலணி மாநாடு நடாத்தப்பட்டது.


மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

யாழ் - பூநகரி படகுப் பயண முன்னேற்பாடு, பா.உ. சந்திரகுமார் நேரடி விஜயம்!

யாழ்ப்பாண - பூநகரி படகுச் சேவையை எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பித்து வைப்பதற்கான முன்னேற்பாடுகளைக் கவனிக்கும் நோக்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். அசோக் சந்திரகுமார் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் 2010.06.03 ஆம் திகதி சென்று பார்வையிட்டுள்ளனர்.

பூநகரி மண்ணித்தலை எனும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இறங்குதுறையைப் பார்வையிட்ட பின்னர் அங்கிருந்து கடற்படை படகு மூலம் கடல்வழியைப் பாதையையும் பார்வையிட்டனர்.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

Thursday, June 3, 2010

பரந்தன் கரைச்சி வடக்குப் பிரதேச மக்கள் பிரதிநிதிகளுடன் பா.உ. சந்திரகுமார் சந்திப்பு!

பரந்தன் கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான எம். அசோக் சந்திரகுமார் அவர்களை கரைச்சி வடக்குப் பிரதேச மக்கள், புனரமைப்புப் பிரதிநிதிகள் சந்தித்துத் தமது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில் கரைச்சி வடக்கு (பரந்தன்) பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் திரு செல்வராஜா, கரைச்சிப் பிரதேச விசேட ஆணையாளர் திரு. பொன். நித்தியானந்தம், கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தின் பொதுமுகாமையாளர் திரு. கணேசபிள்ளை, உட்பட பிரதேச ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புப் பிரதிநிதிகள் கடற்றொழிலாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

கரைச்சி வடக்கு - சுண்டிக்குளம் கடலேரியில் கடற்றொழில் செய்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினரைப் பாராட்டியதுடன் சமாசத்தின் செயலாளரும் விசேட ஆணையாளருமான பொன். நித்தியானந்தம் அவர்கள் கரைச்சி வடக்கு ப.நோ.கூ. சங்கம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளைப் பற்றியும் மற்றும் தேவைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

கூடிய விரைவில் கூட்டுறவுச் சங்கத்தின் வாகனங்களை மீட்டுத்தரும்படியும் புதிய வாகனங்களைப் பெறுவதற்கு கடனுதவி பெற ஏற்பாடு செய்யும் படியும், அத்துடன் சங்கக் கிளைகள் ஆரம்பிப்பதற்கான கட்டட வசதிகள் இல்லாமலிருப்பதாகவும் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் கேட்டுக்கொண்டார்.

இவர்களது கோரிக்கைகளுக்குப் பதிலளித்த சந்திரகுமார் அவர்கள் கூட்டுறவு அமைச்சர் வடமாகாண ஆளுநர் அரசாங்க அதிபர் படை அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடி இப்பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதாகத் தெரிவித்தார்.

வன்னி தொழில் நுட்பக் கல்லூரியை மீள ஆரம்பிப்பது குறித்து வன்னி தொழில் நுட்பக் கல்லூரியின் இணைப்பாளர் கலந்துரையாடலில் குறிப்பிட்டார். அவரின் கோரிகைக்கேற்ப தொழில்நுட்பக் கல்லூரியை மீள இயங்குவதற்குத் தேவையான உதவிகளை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்பு கொண்டு பெறுவதற்கு முயற்சிப்பதாகத் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அசோக் சந்திரகுமார் குறிப்பிட்டதுடன் புதிய அமைவிடமொன்றுக்கான காணி தொடர்பாக கண்டறிவதாகவும் கூறினார்.

பிரதேச பாடசாலைகளுக்குத் தேவையான ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான பஸ் சேவை போன்றவை தொடர்பாகவும் பரந்தன் பிரதேச மக்கள் தமது தேவைகளை நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.
மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் விரைவில் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளை முதற்கட்டமாகத் தீர்ப்பதாகவும் ஏனையவற்றை கட்டம் கட்டமாக தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததுடன், இவை அனைத்தும் மக்களின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் இருந்தால் தான் மீள் அபிவிருத்திக்கான அபிவிருத்தி வளர்ச்சியுறும் எனவும் தெரிவித்தார்.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

கிளிநொச்சி தருமபுரம் பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் அசோக் சந்திரகுமார் விஜயம்!

கடந்த 2010.06.02 ஆம் திகதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான எம்.அசோக் சந்திரகுமார் கிளிநொச்சி தருமபுரம் பிரதேசத்துக்கு நேரில் சென்று தருமபுரம் மகா வித்தியாலயத்தில் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

நாகேந்திரபுரம், கட்டைக்காடு, தருமபுரம், புளியம்பொக்கணை, சுண்டிக்குளம் சந்தி, கல்லாறு, கண்ணகிநகர் மற்றும் புன்னைநீராவி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலரும் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினரிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.


மீள்குடியேற்றம், விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் கைவிடப்பட்ட பொருட்களை மீளப் பெறுதல், விவசாயம் மேற்கொள்வதற்கான உதவி, முன்பள்ளிகளை மீள இயங்க வைத்தலும் ஆசிரியர் பற்றாக்குறைக்கான நிவர்த்தியும், காணி உத்தரவாதம், போக்குவரத்து போன்ற பல முக்கியப் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து பாராளுமன்ற உறுப்பினரிடம் மக்கள் தமது தேவைகளைக் கோரினர்.

இம்மக்களது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதுடன், கிளிநொச்சியிலுள்ள அனைத்துப் பிரதேசங்களுக்கும் நேரில் வந்து நிலைமைகளை அவதானிக்கவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அசோக் சந்திரகுமார் மேற்படி சந்திப்பில் குறிப்பிட்டார்.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

Wednesday, June 2, 2010

அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் பொது அமைப்புக்கள் முனைப்புடன் செயற்பட வேண்டும். - பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

கடந்த 2010.05.30 ஆம் திகதி மாலை கைதடிப் பிரதேச பொது அமைப்புக்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், சனசமூக நிலையங்கள் மற்றும் மாதர் சங்கங்கள் போன்றவற்றை உள்ளடக்கி இப் பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல், கைதடி தெற்கு மின்னொளி சனசமூக நிலையத்தில் திரு.வே. கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் சந்திரகுமார், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் கே. சுப்பையா உட்பட பலர் உரை நிகழ்த்தினர்.

பாராளுமன்ற உறுப்பினர் அசோக் சந்திரகுமார் இக் கலந்துரையாடலில் உரையாற்றுகையில் கடந்த காலத்தில் கிராமிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதியொதுக்கீடு செய்தாலும் அந்த அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றத்தை நேரில் சென்று பார்வையிட முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. தற்போது அத்தகைய நிலை மாற்றமடைந்ததன் காரணமாக கிராம மக்களின் தேவைகளை நேரில் சென்று கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளையும் கண்டறியக் கூடியதாக உள்ளது.

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் பொது அமைப்புக்கள் முனைப்புடன் செயற்பட்டு கிராமத்தின் அவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றை அடையாளப்படுத்தும் பட்சத்தில் அந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை எம்மால் முன்னெடுக்க முடியும் என்றும் பல கிராமங்கள் இன்னமும் போக்குவரத்து, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாதிருப்பதையும் தற்போது காண முடிவதாகவும் தெரிவித்தார்.

இறுதியில் கைதடியிலுள்ள ஊரியான், கோகிலாக்கண்டி போன்ற கிராமங்களுக்கு நேரில் சென்ற சந்திரகுமார் பா.உ அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.