www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Wednesday, June 2, 2010

அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் பொது அமைப்புக்கள் முனைப்புடன் செயற்பட வேண்டும். - பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

கடந்த 2010.05.30 ஆம் திகதி மாலை கைதடிப் பிரதேச பொது அமைப்புக்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், சனசமூக நிலையங்கள் மற்றும் மாதர் சங்கங்கள் போன்றவற்றை உள்ளடக்கி இப் பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல், கைதடி தெற்கு மின்னொளி சனசமூக நிலையத்தில் திரு.வே. கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் சந்திரகுமார், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் கே. சுப்பையா உட்பட பலர் உரை நிகழ்த்தினர்.

பாராளுமன்ற உறுப்பினர் அசோக் சந்திரகுமார் இக் கலந்துரையாடலில் உரையாற்றுகையில் கடந்த காலத்தில் கிராமிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதியொதுக்கீடு செய்தாலும் அந்த அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றத்தை நேரில் சென்று பார்வையிட முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. தற்போது அத்தகைய நிலை மாற்றமடைந்ததன் காரணமாக கிராம மக்களின் தேவைகளை நேரில் சென்று கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளையும் கண்டறியக் கூடியதாக உள்ளது.

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் பொது அமைப்புக்கள் முனைப்புடன் செயற்பட்டு கிராமத்தின் அவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றை அடையாளப்படுத்தும் பட்சத்தில் அந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை எம்மால் முன்னெடுக்க முடியும் என்றும் பல கிராமங்கள் இன்னமும் போக்குவரத்து, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாதிருப்பதையும் தற்போது காண முடிவதாகவும் தெரிவித்தார்.

இறுதியில் கைதடியிலுள்ள ஊரியான், கோகிலாக்கண்டி போன்ற கிராமங்களுக்கு நேரில் சென்ற சந்திரகுமார் பா.உ அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.