இக் கலந்துரையாடலில் மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெனாண்டோ, மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான எம்.அசோக் சந்திரகுமார், யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள், மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.
வலிகாமம் வடக்கு, தென்மராட்சி கிழக்கு, வடமராட்சி கிழக்கு அடங்கலான உயர்பாதுகாப்பு வலயப் பகுதி மக்களின் மீள்குடியேற்றம், வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் மற்றும் இவர்களுக்கான நிவாரணத்தை மேலும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைத்துக் கலந்துரையாடினர்.
